ஆர்க்காங்கல் புறா (Archangel pigeon) என்பவை ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்தவை ஆகும். இவை அவற்றின் வழக்கத்திற்கு மாறான உலோகம் போன்ற இறகு நிறத்திற்காக அறியப்படுகின்ற புறா வகையாகும். இவை அனைத்தும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை 12 அவுன்சு அளவுள்ள சிறிய புறா வகையாகும். இவை கால்களில் இறகற்றும், கருப்பு ஆரஞ்சு நிறக் கண்களுடனும் காணப்படுகின்றன. இவை கொண்டையுடன் அல்லது கொண்டையற்றும் காணப்படுகின்றன. இவற்றின் உடல் வெண்கல அல்லது தங்க நிறத்திலும், இறக்கைகள் கருப்பு, வெள்ளை, நீல நிறத்திலும் காணப்படுகின்றன.
About the author
Related Posts
September 22, 2021
மான் பன்றி
October 8, 2021
செந்தலை வல்லூறு
September 22, 2021