பட்டைவால் மூக்கன் (Bar-tailed godwit) இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட இப்றவை உள்ளான் குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். உலகில் உள்ள பறவைகளிலேயே நீண்ட தூரத்திற்கு எங்கும் ஓய்வெடுக்காமல் பறக்கும் தன்மைகொண்ட இப்பறவை ஆர்டிக் பகுதிக்கு சென்று முட்டையிட்டு இனவிருத்தி செய்கிறது. ஆஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற நாடுகளின் கடற்கரை ஓரத்திலும் காணமுடிகிறது.
இப்பறவை ஈரமான தரை விரிப்பிலும் தாவரங்களுக்கு அருகிலும் முட்டையிடுகிறது. தாவரங்களில் காணப்படும் சிறு பூச்சிகள், நீர்த்தாவரங்கள், ஒட்டு மீன்கள் போன்றவற்றை உட்கொள்கிறது.