கருப்புத்தலை மீன்கொத்தி

கருப்புத்தலை மீன்கொத்தி (black-capped kingfisher) இவை வெப்ப மண்டல ஆசியாவின் பலபகுதிகளிலும், சீனா, கொரியா, தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளிலும் காணப்படுகின்றன. இப்பறவை மரங்களில் வாழும் மீன்கொத்தி இனத்தைச் சார்ந்தது ஆகும். இவை வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து இலங்கை, ஜாவா, தாய்லாந்து, மற்றும் புருனே போன்ற தீவு நாடுகளுக்குச் செல்லுகிறது. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை காணப்படும் இடங்கள் நீர் நிலைகளுக்கு அருகில் என்றாலும் சில நேரங்களில் சதுப்பு நிலக்காடுகளிலும் காணலாம்.


இவை பொதுவாக கோடை காலங்களில் இனப்பெருக்கம் செய்கிறது. இதன் கூடுகளைப் பூமியில் பள்ளம் தோண்டி அமைத்துக்கொள்ளுகின்றன. ஒரு தடவைக்கு 4 முதல் 5 முட்டைகள் இட்டு அடைகாத்து வருகிறன. மற்ற மீன்கொத்திகளைப்போலவே இவற்றையும் இதன் நீல நிற இறகிற்காவே வேட்டையாடப்படுகின்றனர். சீனா நாட்டில் இதன் இறகுகளைக்கொண்டு விசிறி செய்யப்படுகிறது. ஆங்காங் நாட்டில் இதன் இறகுகள் கொண்டு பெண்கள் பயன்படுத்தும் ஆபரணங்கள் செய்யப்படுகின்றது.


வெளி இணைப்புகள்

கருப்புத்தலை மீன்கொத்தி – விக்கிப்பீடியா

Black-capped kingfisher – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.