கருவால் மூக்கன் (ஒலிப்பு (உதவி·தகவல்)) (black-tailed godwit (Limosa limosa) என்பது நீண்ட பெரிய கால்களும், நீண்ட அலகும் கொண்ட ஒரு பறவை ஆகும். இப்பறவைபற்றி 1758 இல் முதன்முதலில் கரோலஸ் லின்னேயசால் விவரிக்கப்பட்டது. இது இப்பறவை மூக்கன் பேரினத்தைச் சேர்ந்த பறவை ஆகும். இவற்றில் மூன்று துணை இனங்கள் உள்ளன, இவை அனைத்தும் ஆரஞ்சு நிறத் தலை, கழுத்து, மார்பு, இனப்பெருக்க தோகை போன்றவை குளிர்காலத்தில் மந்தமான சாம்பல் பழுப்பு நிறத்தில் இருக்கும், மற்ற அனைத்து காலத்திலும் இதன் சிறகுகள் தனித்துவமான கருப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் இருக்கும். புறாவை விட சற்று பெரிய அளவில் இருக்கும் இந்த வகைப் பறவை இருக்கும்
நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இந்த பறவையினம் புவியின் வடபகுதியான ஐரோப்பாவின் ஐசுலாந்தில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து வாழ்கின்றன. இவை ஆண்டுதோறும் குளிர்காலத்தில் தென்பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றன. நெடுந்தொலைவு பறக்கும் இந்த வகைப் பறவைகளை தமிழகத்தில் கருவால் மூக்கன்கள் என்று அழைக்கிறோம். இந்த பறவையின் மூக்கு (அலகு) நீளமாக இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் கடற்கரையோரங்களில் பெரும்பாலும் அதிக அளவில் காணப்படும் இந்த பறவைகள் சில நேரங்களில் உட்பிரதேசங்களில் உள்ள நீர்நிலைகளுக்கும் வருகின்றன.