பிளைத் நாணல் கதிர்க்குருவி

பிளைத் நாணல் கதிர்க்குருவி (Acrocephalus dumetorum) அல்லது வேலி கதிர்க்குருவி, ஐரோப்பா, மத்திய ஆசியா, இந்தியத் துணைக்கண்டம் ஆகிய பகுதிகளில் காணப்படும் ஒரு வகை நாணல் கதிர்குருவி ஆகும். சிட்டுக்குருவியை விட அளவில் சிறிய (நீளம் 14 cm) குருவியான இது ரஷ்யா, ஸ்கான்டினாவியா உள்ளிட்ட ஐரோப்பியப் பகுதிகளிலும் வடக்கு ஈரான், பாகிஸ்தானின் குவெட்டா மாகாணம் ஆகிய பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து வலசை போகும் காலத்தில் கிட்டத்தட்ட அனைத்து குருவிகளும் இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கையில் காணப்படுகின்றன.


பொது இயல்புகள்


நாணல் கதிர்க்குருவி என்ற பெயரைப் பெற்றிருந்தாலும் இது பெரும்பாலும் நாணல்களில் காணப்படுவதில்லை; மாறாக, நீர்நிலைகளை விட்டு தொலைவில் புதர்கள் அதிகம் உள்ள இடங்களில் காணப்படும். பார்ப்பதற்கு இவை இடுனா பேரின வகை கதிர்குருவிகளில் Iduna rama -வைப் போல் இருக்கும்; ஆனால் அவற்றின் குணமான, மரங்களின் மத்தியிலும் உச்சியிலும் காணப்படும் தன்மை பிளைத் நாணல் குருவிகளிடம் இல்லை — மாறாக, இவை பெரும்பாலும் புதர்களின் அடிப்பகுதியிலும் தரையிலும் இருக்கும் தன்மை உடையன.


பரவலும் வாழிடமும்


பரவல்


ஐரோப்பாவில்: கிழக்கில் உருசியா, வடக்கில் பின்லாந்து வரையிலும் மேற்கே ஐசுலாந்து வரையிலும் தெற்கே அவுஸ்திரியா வரையிலும்,


ஆசியாவில்: தெற்கில் பாகிஸ்தான் வரையிலும் மத்தியில் கசகஸ்தான் தஜிகிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் கிழக்கே மங்கோலியா வரையிலும் இது காணப்படுகிறது.


வலசை போகும் இடங்கள்: பெரும்பாலும் இந்தியத் துணைக்கண்டம் மற்றும் மயன்மார்.


வாழிடம்


சமவெளிப் பகுதிகள், மலைப் பகுதிகளில் 2100 மீ வரையிலும்


இனங்காண உதவும் குறிப்புகள்


உருவம்


மேல்பகுதி :ஆலிவ் பச்சை கலந்த பழுப்பு நிறம்


புருவம் (அல்லது புருவமேலம்) : கண்ணிற்கு முன் பகுதியில் மட்டும் தெளிவாக இருக்கும்


அடிப்பகுதி : வெண்ணிற தொண்டையும் பிற பகுதிகள் வெளிர் மஞ்சள் நிறமும் கொண்டது


பாலின வேறுபாடு: இல்லை


வெளி இணைப்புகள்

பிளைத் நாணல் கதிர்க்குருவி – விக்கிப்பீடியா

Blyth’s reed warbler – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.