பொகாரா டிரம்பெட்டர் புறா (Bokhara Trumpeter pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. பொகாரா டிரம்பெட்டர் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவ்வினம் அதன் நீண்ட கால் இறகுகளுக்காகவும் மற்றும் இரட்டை கொண்டைக்காகவும் அறியப்படுகிறது.
இவ்வினம் அமெரிக்காவில் மிகப்பிரபலமான டிரம்பெட்டர் இனங்களில் ஒன்றாகும்.