அமாயுரோர்னிசு அகூல்
சைக்கீசு,1832
பழுப்பு காணான் கோழி (Brown crake)(ஜாபோர்னியா அகூல்), அல்லது பழுப்பு புதர் கோழி தெற்காசியாவில் காணப்படும் காணான் கோழிகள்/நாமக் கோழிகள் வகைகளுள் ரல்லிடே குடும்பத்தினைச் சார்ந்த நீர்ப் பறவையாகும். இதன் சிற்றினப்பெயரான அகூல் தோற்றம் குறித்த நிச்சய தகவல் இல்லை. இது இந்து புராணங்களிலிருந்து தோன்றியிருக்கலாம் அல்லது சிங்கள வார்த்தையான குக்குல என்பதிலிருந்து தோன்றியிருக்கலாம். இச்சொல்லானது தாழைக்கோழி மற்றும் தண்ணீர்க்கோழிக்கும் பயன்படுத்தப்படுகிறது.