சின்ன மரங்கொத்தி

சின்ன மரங்கொத்தி (Brown-capped pygmy woodpecker) மரங்கொத்திகளில் மிகச்சிறிய வகையாகும். இது இந்தியா இலங்கை நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.


உடலமைப்பு


13 செ.மீ. – பழுப்பு நிற உடலில் வெளிர் பட்டைகளைக் கொண்டது. உடலின் கீழ்ப்பகுதி பழுப்புத் தோய்ந்த வெளிர் நிறத்தில் கருப்புக் கோடுகளைக் கொண்டது.


காணப்படும் பகுதிகள் ,உணவு


கிழக்குக் கடற்கரை சார்ந்த வட்டாரங்கள் நீங்கலாகத் தமிழகம் எங்கும் இலையுதிர் காடுகள், மூங்கில் காடுகள், விளைநிலங்களை அடுத்த தோப்புகள் ஆகியவற்றில் காணலாம். இணையாகத் தரையோடு தாழ்ந்த மரங்களின் கிளைகளில் பசையெடுப்பானோ என்று நினைக்கும் படியாக ஊர்ந்து புழுப்பூச்சிகளைப் பிடிக்கும். மற்ற மரங்கொத்திகளைப் போல பெரிய மரங்களின் அடிமரங்களைச் சார்ந்து இரை தேடும் பழக்கம் இதனிடம் இல்லை. தேன்சிட்டுப் போல இலைக் கொத்துகளிடையே தாவிப் பறக்கும் காலை நேரத்தில் இலைகளற்ற மரக்கொம்பில் அமர்ந்து வெயில் காயும் பழக்கம் உடையது. புழு பூச்சிகள் எறும்பு ஆகியவற்றோடு தேனீ, அந்துப்பூச்சி ஆகியவற்றையும் உணவாகக் கொள்ளும். பழங்கள், மலர்கள், மலர்த்தேன் ஆகியவற்றையும் விரும்பி உண்ணும்.


இனப்பெருக்கம்


பிப்ரவரி முதல் ஜுலை முடிய வெட்ட வெளியாயுள்ள காடுகள்,பட்டுப்போன சிறு மரக்கொம்புகளில் வங்கு குடைந்து 3 முட்டைகள் இடும்.


வெளி இணைப்புகள்

சின்ன மரங்கொத்தி – விக்கிப்பீடியா

Brown-capped pygmy woodpecker – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.