புள்ளிப் புறா

புள்ளிப் புறா என்பது ஆங்கிலத்தில் (Spotted Dove ) என்று அறியப்படுகிறது இது இந்தியத் துணைக்கண்டத்திலும் தென்கிழக்காசியாவிலும் காணப்படுகிறது, சிறிய நீண்ட வாலை கொண்ட சிற்றினம் ஆகும்.


பெயர்கள்


தமிழில் :புள்ளிப் புறா


ஆங்கிலப்பெயர் :Spotted Dove


அறிவியல் பெயர் :streptopelia chinensis


உடலமைப்பு


30 செ.மீ. – கருப்பும் வௌ;ளையுமான சதுரங்கள் பலகையை ஒத்த புள்ளிகளைப் பின் கழுத்தில் கொண்ட இதன் உடலின் மேற்பகுதி இளஞ்சிவப்புக் கலந்த பழுப்பாகவும் சாம்பல் நிறமாகவும் இருக்கும். மார்பு இளஞ்சிவப்பாகவும் வயிறு, வாலடி, வால் கீழ் இறகுகள் வெள்ளையாகவும் இருக்கும்.


காணப்படும் பகுதிகள்


நீர் வளமிக்க காடுகளையும் விளைநிலங்களையும் ஈரமிக்க இலையுதிர் காடுகளையும் சார்ந்து இணையாகவோ சிறு கூட்டமாகவோ திரியும்.


உணவு


காட்டுப்பாதைகளிலும் அறுவடை முடிந்த வயல்களிலும் தானியங்களையும் புல் விதைகளையும் உணவாகப் பொறுக்கித் தின்னும். இனப்பெருக்கப் பருவம் நெருங்கும் போது உயர இருந்து இறக்கை மடக்கிக் கீழே குப்புற விழும் பழக்கம் கொண்டது. க்ரூக்ரூக் எனக் குரல் கொடுக்கும். இக்குரல் ஒலி வட்டாரத்திற்கு வட்டாரம் மக்களின் வட்டார மொழி போலச் சிறிதளவு வேறுபடுவது உண்டு.


இனப்பெருக்கம்


ஆண்டு முழுவதும் மரங்களில் தாழ்வான கிளைகளிடையே தட்டுப் போல கூடமைத்து 2 முட்டைகள் இடும். மக்கள் வாழும் பங்களாக்களின் மாடிச்சுவர் பிதுக்கம். இறவாரம், கோப்பு ஆகியவற்றிலும் கூடும் அமைக்கும்.வெளி இணைப்புகள்

புள்ளிப் புறா – விக்கிப்பீடியா

About the author

Leave a Reply

Your email address will not be published.