சிறு பக்கியானது பக்கி சிற்றினங்களில் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு சிற்றினம் ஆகும்.
பெயர்கள்
தமிழில் :சிறு பக்கி
ஆங்கிலப்பெயர் :Common Indian Nightjar
அறிவியல் பெயர் :Caprimulgus asiaticus
உடலமைப்பு
24 செ.மீ.-மற்ற பக்கிகளைவிட உருவில் சிறியதான இது கருப்புக் கோடுகளும் புள்ளிகளும் கொண்ட பழுப்பு நிற உடலைக் கொண்டது. வாலின் ஓர இறக்கைகளின் முனைகள் வெண்புள்ளிகளைக் கொண்டதாக இருக்கும்.
காணப்படும் பகுதிகள்
தமிழகம் எங்கும் ஆங்காங்கே மலை அடிவாரம் சார்ந்த இலையுதிர் காடுகள், புதர்காடுகள் ஆகியவற்றில் பள்ளமான நீரோடைகளை அடுத்துக் காணலாம்.
உணவு
பகல் முழுதும் நிழலில் பதுங்கியிருந்து இரவில் வெளிப்பட்டு பறக்கும் பூச்சிகளைப் பிடிக்கும். பறக்கும் தோற்றம் வௌவால் பறப்பதை ஒத்தது. சாலை ஓர மைல் கற்கள், வேலிக்கம்பிகள் ஆகியவற்றின் மீத அமா;ந்து ட்சக் ட்சக் எனக் கத்தும். புழுதியில் புரளும் விருப்பம் கொண்டது.
இனப்பெருக்கம்
பிப்ரவரி முதல் செப்டம்பர் வரையான பருவத்தில் புதர்க்காடுகளில் தரையில் 2 முட்டைகள் இடும். நகர்ப்புறங்களில் புதர்கள் வளர்ந்திருக்கும் தோட்டங்களைக் கொண்ட வீடுகளிலும் முட்டையிட்டிருக்கக் காணலாம்.