சேர் அமி புறா

சேர் அமி (Cher Ami (பிரெஞ்சு மொழியில் “பிரியமான நண்பன்”, என்று பொருள்) என்பது ஒரு ஹோமிங் பெண் புறா ஆகும். இது முதலாம் உலகப்போ போரின்போது பிரிட்டன் புறா ரசிகர்களால் பிரஞ்சுக்கு எதிராக போரிட்டுவந்த அமேரிக்க இராணுவத்தின் தகவல் பிரிவுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. பின்னர் அமேரிக்க புறாப்பயிற்சியாளர்களால் இதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்புறா 1918 அக்டோபரில் நடந்த அரகோன் போரில் 77 வது படைப் பிரிவின் காயமுற்ற 200 படை வீரர்களை காப்பாற்ற உதவியது.


முதல் உலகப்போர் பணியில்


1918 அக்டோபர் 3 இல், மேஜர் சார்லஸ் வைட் விட்லெசி மற்றும் 500 க்கும் மேற்பட்ட படை வீரர்கள் உணவு அல்லது வெடிமருந்து இல்லாமல் எதிரிப் படைகளுக்கு பின்னால் உள்ள மலை பக்கத்தில் சிக்கித் தவித்தனர். அவர்கள் தங்கள் இருப்பிடத்தை அறியாத நட்பு துருப்புகளிலிருந்து உதவிபெற விரும்பினர். இந்நிலையில் இவர்களின் படை ஜேர்மனியர்களால் சூழப்பட்டது, முதல் நாளில் பலர் கொல்லப்பட்டும், காயமடைந்தனர். இரண்டாவது நாளன்று, 190 க்கும் மேற்பட்டவர்கள் உயிருடன் எஞ்சி இருந்தனர். மேஜர் விட்லேசி புறாவில் செய்திகளை அனுப்பினார். முதல் செய்தியான, “பலர் காயமுற்றுள்ளனர், நாங்கள் வெளியேற்ற முடியாத நிலையில் உள்ளோம்.” என்ற செய்தியைச் சுமந்து சென்ற புறா எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது. இரண்டாவதாக, “வீரர்கள் துன்பப்படுகிறார்கள், ஆதரவுப் படையை அனுப்ப முடியுமா?” என்ற செய்தியை சுமந்த இரண்டாவது புறாவும் சுட்டுக் கொல்லப்பட்டது. கடைசியில் மீதமிருந்த ஒரே ஒரு புறாவான “சேர் அமி”யின் இடது காலில் கிழ்கண்டவாறு ஒரு குட்டி ஒரு குறிப்புடன் அனுப்பினர்,


We are along the road paralell to 276.4. Our own artillery is dropping a barrage directly on us. For heavens sake stop it.


செர் அமி செய்தியைச் சுமந்துவாறு தன் இருப்பிடத்துக்குச் செல்ல முயன்றபோது, ஜெர்மானியர்கள் அது புறப்படுவதைக் கண்டனர். அதை நோக்கி துப்பாக்கி தோட்டாக்கள் பறந்தன அந்த தோட்டாக்களின் மத்தியில் புறா பறந்தபடி இருந்தது. சேர் ஆமி இறுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது, ஆனால் அது சுதாரித்து மறுபடியும் பறந்து சென்றது. 194 பேரின் உயிர்களை காப்பாற்ற உதவும்விதமாக 25 நிமிடங்களில் 25 மைல் (40 கிமீ) தொலைவில் உள்ள பிரிவின் தலைமையகத்தின் மாடிக்கு வந்து சேர்ந்தது. இந்த பயணத்தில் செர் அமி, மார்பில் சுடப்பட்டு, இரத்தத்தால் மூடப்பட்டு ஒரு கண் பார்வை தெரியாத நிலையில், இரத்தம் வடிந்து தொங்கிய காலுடன் செய்தியைக் கொடுத்தது.


இதனால் சேர் ஆமி 77 வது காலாட்படை பிரிவின் கதாயாகன் ஆனது. இராணுவ மருத்துவர்கள் சிகிச்சை அளித்து சேர் ஆர்மியைக் காப்பாற்றினர். ஆனால் அதனுடைய காலைக் காப்பாற்ற முடியாததால், அதற்கு ஒரு சிறிய மரக் காலை அணிவித்தனர். இதன்மூலம் இது பயணிக்கும் ஆற்றலைப் பெற்றது.


விருதுகள்


அமெரிக்கா திரும்பிய பிறகு சேர் ஆமி சேவை திணைக்களத்தின் சின்னமாக மாறியது. அதன் வீர சேவைக்கு ஓக் இலைப் பதக்கம் க்ளஸ்டருடன் க்ரோக்ஸ் டி குர்ரே விருது வழங்கப்பட்டது. 1919 ஆம் ஆண்டு சூன் 13 அன்று நியூ ஜெர்ஸியிலுள்ள ஃபோர்ட் மான்மவுட்டில் இறந்தது.

வெளி இணைப்புகள்

சேர் அமி புறா – விக்கிப்பீடியா

Cher Ami – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *