தத்துக்கிளி கதிர்க்குருவி

தத்துக்கிளி கதிர்க்குருவி பழைய உலக கதிர்க்குருவியகும், இது வலசையாக மட்டுமே தமிழ்நாட்டிற்கு வரும் பறவையாகும். இங்கு இனப்பெருக்கம் செய்வதில்லை.


பெயர்கள்


தமிழில் :தத்துக்கிளி கதிர்க்குருவி


ஆங்கிலப்பெயர் :Pale Grasshopper – warbler


அறிவியல் பெயர் : Locustella naevia


உடலமைப்பு


13 செ.மீ- உடலின் மேற்பகுதி ஆலிவ் பழுப்பாகவும், மேவாய், தொண்டை, நடுவயிறு ஆகியன வெண்மையாகவும், எஞ்சிய உடலின் கீழ்ப்பகுதி மங்கிய மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.


காணப்படும் பகுதிகள்


குளிர்காலத்தில் செப்டம்பரில் வலசை வரும் இதனைப் புல் வளர்ந்துள்ள மலைப் பகுதிகள், புதர்க்காடுகள், நெல் வயல்கள், நீர்வற்றிய ஏரிக்கரைப் புதர்கள் ஆகியவற்றில் மே மாதம் வரை காணலாம்.


உணவு


புல்லிடையே தனித்து மறைந்து திரியும் இது காலை மாலை நேரங்களில் வெளிப்பட்டு புல்லின் மேல் உயர அமரும் பழக்கம் உடையது. மனிதர்கள் மிதிக்கும் அளவுகிட்ட நெருங்கும் வரை பதுங்கி இருக்கும் இது மிக அருகில் நெருங்கியவுடன் எழுந்து பறந்து அடுத்த புல் புதரில் மறையும். டஸ்க் டஸ்க் எனக் குரல் எழுப்பும். புழு பூச்சிகளே இதன் முக்கிய உணவு.


இனப்பெருக்கம்


மத்திய மேற்கு ஆசியாவில் இனப்பெருக்கம் செய்யும் இது தமிழ்நாட்டில் இனப்பெருக்கம் செய்வதில்லை.வெளி இணைப்புகள்

தத்துக்கிளி கதிர்க்குருவி – விக்கிப்பீடியா

Common grasshopper warbler – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.