அலங்காரப் புறாக்கள் (Fancy pigeon) அனைத்தும் மாடப்புறாவிலிருந்தே உருவாயின. இவை சுமார் 1100 வகை இருப்பதாகக் கூறப்படுகிறது. அளவு, வடிவம், நிறம் மற்றும் குணாதிசயங்களுக்காக இவை புறா வளர்ப்புப் பிரியர்களால் வளர்க்கப்படுகின்றன. சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் புத்தகத்தை எழுதுவதற்கு மூன்று வருடங்களுக்கு முன் பனிப் புறாக்களை வளர்த்தார்.
புறாக் கண்காட்சிகள்
உலகம் முழுவதும் நடத்தப்படும் உள்நாட்டு, பன்னாட்டு புறாக் கண்காட்சிகளில் நடைபெறும் போட்டிகளில் புறா வளர்ப்பாளர்கள் தங்களது புறாக்களைக் காட்சிப்படுத்துகின்றனர்.
அலங்காரப் புறா இனங்கள்
இந்த வகைப்படுத்தல் ஆஸ்திரேலிய முறையைப் பின்பற்றியுள்ளது.
ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள்
இவ்வகைப் புறாக்கள் ஆசியப் பகுதியில் தோன்றின.
வண்ணப் புறாக்கள்
இவ்வகைப் புறாக்கள் ஜெர்மனியில் தோன்றின
சுருள்கள் மற்றும் ஆந்தைகள்
இவ்விடத்தில் சுருள் என்பது அவற்றின் மார்பில் காணப்படும் சுருள் இறகைக் குறிக்கிறது. இவ்வகைப் புறாக்கள் சிறிய மூக்கிற்காக அறியப்படுகின்றன.
ஹோமர் மற்றும் கோழி புறாக்கள்
பவுட்டர் மற்றும் கிராப்பர் வகைப் புறாக்கள்
இவ்வகைப் புறாக்கள் பெரிய அளவிலான காற்றுப்பைக்காக அறியப்படுகின்றன.
கண்காட்சி டம்லர் வகைப் புறாக்கள்
ஃப்ளையிங் டம்லர் மற்றும் கர்ணப் புறாக்கள்
இவை பறத்தல், கண்காட்சி முதலிய பல்வகைப் பயன்களுக்காக வளர்க்கப்படுகின்றன.
ஊணுக்காக வளர்க்கப்படும் புறாக்கள்
இந்த வகைப் புறாக்கள் ஊணுக்காக வளர்க்கப்படுகின்றன.