ஆப்பிரிக்க ஆந்தை (African Owl) மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் துனீசியாவில் உருவாயின. கி.பி.19ம் நூற்றாண்டின் கடைசியில் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆப்பிரிக்கன் ஆந்தை மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும்.
வடிவமைப்பு
இவை சிறிய அலகிற்காக அறியப்படுகின்றன. மற்ற ஆந்தை வகைப் புறாக்களைப்போலவே இவற்றின் மார்பக முன்பகுதியில் ‘ஜபோட்’ எனப்படும் தனி இறகுகள் காணப்படுகின்றன. இவற்றின் கூடுகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும், இல்லையெனில் அவை கூட்டமாக இறக்கின்றன.