விசிறிவால் குருவி

விசிறிவால் குருவி (Fantail) மிகச் சிறிய பறவை இனமாகும். இது ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணைக்கண்டங்களில் காணப்படுகிறது. இப் பறவையினம் ‘ரிகிபிடுரா’ என்கிற மரபு வழியைச் சார்ந்தது. பெரும்பாலான குருவிகள் 15 முதல் 18 செ.மீ. நீளம் உடையது. இது வானில் பறந்து கொண்டே தனது இரையான பூச்சியினங்களை பிடித்து உண்பதால் இதற்கு ‘விசிறிவால் குருவி’ என்ற பெயர் ஏற்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவில் இருக்கும் “வில்லி வேக்டைல்” என்னும் இப்பறவைகள் அளவில் பெரியதாகவும், தரையில் ஊறும் பூச்சியினங்களைத் தாவி பிடிப்பதில் மிகச் சிறந்த வேட்டைக்காரனைப் போலவும் செயல்படுகின்றன. ஆனால் “மோட்டோசிலா” இனத்தை சேர்ந்த ‘வேக்டைல்’களுக்கும், விசிறிவால் குருவியின் இனத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை.


உடல் அமைப்பு


விசிறிவால் குருவி சிறிய உடலையும், நீளமான விசிறிபோன்ற வாலையும்(11.5 முதல் 21 செ.மீ. நீளம்)கொண்டது. சில குருவிகளுக்கு அதன் வால் உடலை விடப் பெரியதாக இருக்கும். அதன் வால் பகுதி அதன் இறக்கையை விட நீளமாக இருக்கும். அதன் வால் பகுதியை மடிக்கும்போது பார்ப்பதற்கு வட்டவடிவமாகவும், விரிக்கும்போது காற்றாடியைப் போலவும் இருப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.


பெரும்பாலும், விசிறிவால் குருவி தனது இறக்கைகளை மடித்து, வால் பகுதியினை சிறிது சுருக்கி வைத்தவாறு கிடைநிலையிலேயே இருக்கும். இதற்கு விதிவிலக்காக, ஆஸ்திரேலியாவின் வடபகுதியான நியூகினியா தீவு, மற்றும் சாலமன் தீவில் உள்ள காக்கெரல் விசிறிவால் குருவிகளின் படங்கள் நிமிர்ந்த நிலையிலேயே காணக்கிடைக்கிறது. இப்பறவைகளின் இறக்கைகள் விரைவாக பறப்பதற்கும், இரையை லாவகமாகப் பிடிப்பதற்கும் ஏதுவாக உள்ளது. பொதுவாக அனைத்து விசிறிவால் குருவிகள் தொலைதூரம் பயணித்து புலம் பெயர்கின்றன. ஆனால் கறுப்பு, வெள்ளை மற்றும் சூதி இன விசிறிவால் குருவிகள் அதிக தூரம் பறப்பதில்லை.


விசிறிவால் குருவியின் அலகு தட்டையாகவும், முக்கோண வடிவிலும் உள்ளதால் வான்வழியில் பறந்திடும் போது இரையைப் பிடித்து உண்பதற்கு ஏதுவாக உள்ளது. வாயின் உட்பகுதி அதன் அலகைப் போலவே நீளமாக உள்ளது. இதன் அலகுகள் மிக மென்மையானது. ஆனால் “வில்லி வேக்டைல்” கடினமான அலகுகளைக் கொண்டுள்ளது.


விசிறிவால் குருவிகளின் இறகுகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இல்லாமல் சற்று மாறுபட்டுக் காணப்படுகிறது. பெரும்பாலும் இதன் இறகுகள் சாம்பல், கறுப்பு, வெள்ளை, மற்றும் காவி நிறங்களில் உள்ளது. ஒரு சில பறவைகளுக்கு மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இறகுகள் இருக்கின்றன.


வெளி இணைப்புகள்

விசிறிவால் குருவி – விக்கிப்பீடியா

Fantail – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.