பிஜி பெட்ரெல்

பிஜி பெட்ரெல் (Fiji Petrel, Pseudobulweria macgillivrayi) எனப்படுவது சிறியவகை கரும் கடற்பறவையாகும். இது ”மக்கில்விரே பெட்ரெல்” (MacGillivray’s Petrel) எனவும் அழைக்கப்படுகிறது.


பிஜி பெட்ரெல் என்ற கடற்பறவையின் வளர்ச்சியுறா மாதிரி ஒன்றை முதன் முதலாக பிரித்தானிய இயற்கை ஆர்வலர் ஜோன் மக்கில்விரே என்பவர் பிஜி தீவுகளில் ஒன்றான காவு தீவில் ‘எச்.எம்.எசு எரால்ட்’ என்ற கப்பலில் செல்லும்பொழுது கண்டெடுத்து அதனை லண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். இப்பறவையினம் பின்னர் 1983 ஆம் ஆண்டில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் ஏழு முறை இவை கடல் வெளியில் பறக்கக் காணப்பட்டன. ஏப்ரல் 1984 இல் முழு வளர்ச்சியடைந்த நிலையில் உள்ள பறவையைக் கைப்பற்றிப் படம் பிடித்தனர். கடைசியாக 2009 செப்டம்பரில் பிஜி தீவுகளில் ஒன்றான குவா தீவின் தெற்கே 25 கடல்மைல் தொலைவில் இவை கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 8 பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டு 11 நாட்களாக அவற்றைப் படம் பிடித்தனர்.


இப்பறவை 30 செமீ உயரமான கரும்பழுப்பு நிறமானவை. இவற்றுக்குக் கரும் கண்களும், வெளிறிய நீல நிற அலகுகளும் உண்டு.


இப்பறவையினம் அரிதாகக் காணப்படும் செய்தி, காவு தீவுகளின் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. அத்துடன் இதன் படம் பிஜியின் வங்கி நாணயத்திலும் பதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2007 இல் காயமடைந்து பின்னர் இறந்த பிஜி பெட்ரெலின் தோல் ஆய்வுக்காக வழங்கப்பட்டது. இப்பறவையினம் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தினால் 192 அழிதருவாயில் உள்ள, அல்லது மிக அரிதான இனங்களில் ஒன்றாக பட்டியல் படுத்தப்பட்டுள்ளது.


மே 2009 இல், இப்பறவையின் முதலாவது கடலில் பறக்கும் படம் காவு தீவு அருகே பிடிக்கப்பட்டது.


வெளி இணைப்புகள்

பிஜி பெட்ரெல் – விக்கிப்பீடியா

Fiji petrel – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.