தவளைவாயன்

தவளைவாயன் (Frogmouths) என்பது ஒரு இரவாடி பறவை ஆகும். இது பக்கியுடன் தொடர்புடைய ஒரு பறவை. இந்தப் பறவைகளானது இந்தோமலேயா மற்றும் ஆத்திரேலியப் பகுதிகளில் பரவியுள்ளன.


உயிரியல்


இவற்றிற்கு அமைந்துள்ள பெரிய தட்டையான அகன்ற தவளை போன்ற அலகுக்காக இப்பெயரைப் பெறறன. இவறறின் இந்த வாயமைப்பு பூச்சிகளைப் பிடிக்க ஏதுவாக உள்ளது. இவற்றின் பறக்கும் ஆற்றல் பலவீனமானது. இவை பகலில் கிளைகளில் படுத்து ஓய்வெடுக்கிறன. இவற்றின் உடலில் உள்ள நிற அமைப்புகளால் உருமறைப்பு பெறுகின்றன. இவை மரக் கிளைக் கவையில் மூன்று வெள்ளையான முட்டைகள் வரை இடுகின்றன. முட்டைகளை இரவில் பெண் பறவையும், பகலில் ஆண் பறவையும் அடைகாக்கின்றன. இந்தப் பறவை இனங்களில் ஆத்திரேலியா மற்றும் நியூ கினியாவில் காணப்படும் மூன்று வகையான தவளை வாயன்கள் பெரிய பறவைகள் ஆகும். அவை பாரிய தட்டையான பரந்த அலகுகுகளைக் கொண்டுள்ளன. அவை சிறிய முதுகெலும்பிளை (தவளைகள், எலிகள், முதலியன) உண்பதாக அறியப்படுகிறது. இவை சில நேரங்களில் இரையை விழுங்குவதற்கு முன்பு இரையை கல்மீது அடிப்பதாகவும் அறியப்படுகிறது. வெப்பமண்டல ஆசியாவில் பத்து வகையான தவளைவாயன்கள் காணப்படுகின்றன. அவை சிறிய, வட்டமான அலகுகளைக் கொண்டுள்ளன. மேலும் அவை முக்கியமாக பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. பொடர்கஸ் மற்றும் பாட்ராக்கோஸ்டோமஸ் ஆகிய இரண்டு வகையான தவளைவாயன்களின் அலகின் அடிப்பகுதியைச் சுற்றி முள்ளரும்புகள் உள்ளன. இதில் பாட்ராச்சோஸ்டோமஸ் தவளை வாயன்கள் நீளமான முள்ளரும்புகளைக் கொண்டவை. அவை பூச்சி இரையிலிருந்து கண்களைப் பாதுகாக்க இருக்கலாம். 2007 ஏப்ரலில்சாலமன் தீவுகளில் இருந்து ஒரு புதிய வகை தவளைவாயன் கண்டறியப்பட்டது. அது புதிதாக வகைப்படுத்தபட்ட இனமான ரிகிடிபென்னாவில் சேர்க்கப்பட்டது.


வெளி இணைப்புகள்

தவளைவாயன் – விக்கிப்பீடியா

Frogmouth – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.