பொன்னிற பெருஞ்செம்போத்து அல்லது சீனப் பெருஞ்செம்போத்து (golden pheasant, Chrysolophus pictus) என்பது பசியானிடே குடும்பத்தைச் சேர்ந்த (பெருஞ்செம்போத்து) வேட்டையாடப்படும் பறவையாகும். இது மேற்கு சீனாவின் மலைப்பகுதிக் காடுகளை தாயகமாகக் கொண்டிருப்பினும், இதன் இனங்கள் ஐக்கிய இராச்சியம், கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, மெக்சிக்கோ, கொலொம்பியா, பெரு, பொலிவியா, சிலி, அர்கெந்தீனா, உருகுவை, போக்லாந்து தீவுகள், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்சு, அயர்லாந்து, ஆத்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இடங்களிலும் காணப்படுகிறன.
வளர்ந்த ஆண் பறவை 90–105 செ.மி நீளமுடையதாகவும், இதனுடைய வால் மொத்த நீளத்தில் மூன்றில் ஒன்றாகவும் காணப்படுகிறது.