பெரிய பொன்முதுகு மரங்கொத்தி

பெரிய பொன்முதுகு மரங்கொத்தி (Greater Flameback) பெரும்பாலும் இந்திய துணைக்கண்டத்தில் காணப்படுகிறது. மேலும் தென்சீனா, சுமத்திரா, மலாய் தீபகற்ப பகுதிகளிலும் காணப்படுகிறது.


பெயர்கள்


தமிழில் :பெரிய பொன்முதுகு மரங்கொத்தி


ஆங்கிலப்பெயர் :greater goldenback, large golden-backed woodpecker


அறிவியல் பெயர் :Chrysocolaptes guttacristatus


உடலமைப்பு


31 செ.மீ- குங்குமச் சிவப்பு உச்சந்தலையும் கொண்டையும் கொண்ட இதன் பிடரியும் பின்கழுத்தும் வெண்மைநிறம், முதுகும் இறக்கைகளும் பொன்நிறமாக இருக்கும். பிட்டம் உச்சந்தலைபோலவே சிவப்பாக இருக்கும். உடலின் கீழ்ப்பகுதி வெளிர்மஞ்சள் நிறமாகக் கருநிறச் செதிள் அமைப்புடையது. குண்களிலிருந்து கன்னங்கள் வழியே செல்லும் கருப்புப் பட்டைகள் இதன் தனித்த அடையாளம்.


காணப்படும் பகுதிகள், உணவு


தமிழ்நாட்டின் மேற்கு மலைத்தொடர் சார்ந்த வட்டாரங்களில் காணப்படும். இது சேர்வராயன் மலையிலும் இருக்கக் கூடும். இன்னமும் அதுபற்றிய உறுதியான தகவல் இல்லை. அடிமரங்களில் தொத்தி, பட்டைகளைத் தட்டிப் பூச்சிகளை வெளிப்படுத்திப் பிடித்துத் தின்னும். இது பார்ப்பவர் கண்களில் படாதபடி திறமையாக மறைந்து கொள்ளும். பூச்சிகளோடு மலர்ந்தேன். இலுப்பைப்பூ ஆகியனவற்றையும் உணவாகக் கொள்ளும். கீறிச்சிட்டுச் சிரிப்பது போலக் கத்தும்.


இனப்பெருக்கம்


டிசம்பர் முதல் மார்ச் வரை அடி மரத்தைக் குடைந்து ஒரே ஒரு முட்டையிடும்.


வெளி இணைப்புகள்

பெரிய பொன்முதுகு மரங்கொத்தி – விக்கிப்பீடியா

Greater flameback – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.