பெரிய மைனா (அக்ரிடோதெரெசு கிராண்டிசு), என்பது வெள்ளை-புழை மைனா என்றும் அழைக்கப்படுகிறது. இது இசுடுர்னிடே குடும்பத்தைச் சார்ந்த நடுத்தர பறவையாகும். இது வடகிழக்கு இந்தியா, வங்காளதேசம் முதல் தென்கிழக்காசியா வரை காணப்படுகிறது. .
விளக்கம்
நீளமான முன்னெற்றி கருப்பு நிற இறகுகள் மைனாவின் முன் முகட்டை உருவாக்குகிறது. இது பின்னோக்கி சுருண்டு காணப்படும். இதன் அலகு மற்றும் கால்கள் மஞ்சள் நிறமுடையன. இதன் புணர் புழை முதல் வால் முனை வரை வெள்ளை நிறத்துடனும் ஒரு வெள்ளை இறக்கை திரள் காணப்படும்.