பெரிய காது பக்கி

பெரிய காது பக்கி (Great eared nightjar, Lyncornis macrotis) என்பது ஒரு பக்கி இனப் பறவையாகும். இது பக்கி குடும்பத்தில் மிகப்பெரிய பறவைகளில் ஒன்றாகும். இதன் நீளமானது 31 முதல் 41 cm (12 முதல் 16 in) வரை இருக்கும். இப்பறவைகளில் ஆண் பறவையானது சராசரியாக 131 g (4.6 oz) எடையைக் கொண்டதாகவும், பெண் பறவைகள் சராசரியாக 151 g (5.3 oz) எடையுள்ளவையாக உள்ளன. எனவே இது nacunda nighthawk குடும்பத்துக்கு அடுத்து இரண்டாவது பெரிய பறவையாகும்.


பரவலும் வாழிடமும்


இப்பறவையானது தென்கிழக்கு ஆசியாக்கண்டப்பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளிலும், இலங்கை, வங்காளதேசம், இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடமானது மிதவெப்ப மண்டல அல்லது தாழ் நிலை வெப்பமண்டல காடுகள் ஆகும்.


நடத்தை


மற்ற இரவாடிகளைப் போலவே இவை அந்தியிலும், இரவில் இயங்கக்கூடியன.


இனப்பெருக்கம்


இவை தரையை சரண்டி அதில் தங்கள் கூட்டை அமைத்து அதில் முட்டையிடுகின்றன. இதன் குஞ்சுகள் மக்கிய இலைத் துகல்களில் உருமறைப்பு செய்துகொள்கின்றன.


வெளி இணைப்புகள்

பெரிய காது பக்கி – விக்கிப்பீடியா

Great eared nightjar – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.