இந்திய விசிறிவால் என்பது ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்த புறா ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. இத்தாலியன் அவுல் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும்.
விளக்கம்
இந்திய விசிறிவால் ஒரு ஆடம்பரப் புறா இனமாகும்; இவை இந்தியாவில் உருவாயின.
அவை ஒரு தனித்துவமான விசிறி வடிவ வாலைப் பெற்றுள்ளன மற்றும் ஆங்கிலேய விசிறிவால் புறாவை விட பெரியதாக இருக்கும். இவை பொதுவாக வெள்ளை நிறத்தில் பழுப்பு புள்ளிகளுடன் காணப்படும், எனினும் வளர்ப்பவர்கள் மேலும் புதிய வண்ணங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்கள் கால்கள் இறகுகளால் மூடப்பட்டுள்ளன மற்றும் பறவைகள் கால் விரல்களில் நடக்கின்றன. இவற்றின் சராசரி எடை 13 அவுன்ஸ் (369 கிராம்) மற்றும் இவற்றின் சராசரி நீளம் 11 அங்குலம் (28 செ.மீ.) ஆகும். இதன் மார்பு நேராக நிமிர்ந்து தலையை விட உயர்ந்து உள்ளது. வால் இறகுகள் தலையணை போல் தலையைத் தாங்கியுள்ளன.
இவை ஒரு தடவைக்குப் பொதுவாக 2 அல்லது 3 முட்டைகளை இடுகின்றன. குஞ்சுகள் பறக்க 4 முதல் 6 வாரங்கள் எடுத்துக் கொள்கின்றன. பொதுவாக ஒரு ஜோடி, குஞ்சுகள் வெளிவந்து 21 நாட்களுக்கு பிறகு மீண்டும் முட்டைகளை இடுகின்றன.