சிவந்த இறக்கை வானம்பாடி

சிவந்த இறக்கை வானம்பாடியானது(Indian bush lark) தெற்கு ஆசியாவில் காணப்படும் ஒரு சிற்றினம் ஆகும்.


பெயர்கள்


தமிழில் :சிவந்த இறக்கை வானம்பாடி


ஆங்கிலப்பெயர் :Indian bush lark Red-winged Bush-Lark


அறிவியல் பெயர் :Mirafra erythroptera


உடலமைப்பு


14 செ.மீ- தோற்றத்தில் பெரிதும் அடுத்ததை ஒத்த இதன் இறக்கைகளில் அமைந்த செம்பழுப்புத்திட்டுகள் மேலும் ஆழ்ந்த சிவப்பு நிறங் கொண்டவை. மார்பிலான திட்டுக்களும் தடித்தனவாக காணப்படும்.


காணப்படும் பகுதிகள் ,உணவு


சிறு கற்கள் நிறைந்த வறள்காடுகளில் தனித்து இலைகளற்ற புதர்ச் செடிகளில் உயர அமர்ந்திருக்கக் காணலாம். மழைமிகுந்து பெய்யும் பகுதிகளில் காணப்படுவதில்லை. சிறு தானியங்கள், புல்விதைகளோடு சிறு புழு பூச்சிகளையும் இரையாகத் தேடித் தின்னும். பாடியபடி உயரப் பறந்து தன் காதலையும் இனப்பெருக்கம் செய்வதற்குரிய இடவரையறை உரிமையையும் காட்ட ஆண் பறவை இவ்வாறு பாடிப் பறந்தபடி இருக்கும். அமர்ந்திருக்கும் புதர் உச்சியிலிருந்து ச்சி.. ச்சி. ச்சி எனக் குரல் கொடுத்தபடி 30 அடி உயரம் வரை பறந்த பின் வீசிசிசி, வீசிசிசிஎன உரக்கக் கத்தத் தொடங்கி இறக்கைகளை அகல விhpத்தபடியும் கால்களைத் தொங்கவிட்டபடியும் தாழப்பறந்து வந்து பெரும்பாலும் புறப்பட்ட புதரின் உச்சியிலேயே அமரும். இவ்வாறு ஒருமுறை உயரப் பறந்து கீழே வர 20 வினாடிகளே ஆகின்றது. இதுபோலப் பாடிப் பறந்தபடி காலை நேரத்தின் பெரும்பகுதியைக் கழிக்கும்.


இனப்பெருக்கம்


டிசம்பர் முதல் மே முடிய தரையில் கால்நடைகளின் குளம்பு ஏற்படுத்திய குழிவில் கோப்பை வடிவில் கூடமைத்து 3 முதல் 4 முட்டைகள் இடும்.


வெளி இணைப்புகள்

சிவந்த இறக்கை வானம்பாடி – விக்கிப்பீடியா

Indian bush lark – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.