நீண்டவால் பக்கி

நீண்டவால் பக்கி(Jerdon’s Nightjar) பக்கிகள் இனத்தை சார்ந்த ஒரு நடுத்தரமான அளவுடைய பறவையாகும்.இது தென் இந்தியா மற்றும் இலங்கையில் காணப்படுகிறது.


பெயர்கள்


தமிழில் :நீண்டவால் பக்கி


ஆங்கிலப்பெயர் :Jerdon’s Nightjar


அறிவியல் பெயர் :Caprimulgus atripennis


உடலமைப்பு


28செ.மீ. – மஞ்சள் பழுப்பான உடலில் பல நிறக்கறைகளும் கோடுகளும் கொண்டது.


காணப்படும் பகுதிகள்


பசுமை மாறாக் காடுகளையும், புதர்க் காடுகளையும் சார்ந்து மலைகளில் 2000மீ உயரம் வரையிலும் ஆங்காங்கே காணலாம். பழுத்து உதிர்ந்து கிடக்கும் இலைகளிடையே எளிதில் பார்வைக்குப் புலப் படாத படியான சுற்றுச் சூழலோடு இயைந்ததாகப் பகலெல்லாம் படுத்திருக்கும். ஒரே இடத்தில் கூட்டமாகப் பத்துப் பன்னிரண்டு பறவைகள் கூடக் குழுவாக இருக்கக் காணலாம். மரக்கிளைகளில் குறுக்காகவும் நெடுக்காகவும் படுத்தபடி சயுங், சயுங் என உரக்கச் சம்மட்டியால் அடிக்கும்போது எழும் ஒலி போல குரல் கொடுக்கும்,


உணவு


புழு பூச்சிகள், இரவில் பறக்கும் இறக்கையுள்ள பூச்சிகள் ஆகியவற்றைப் பிடித்துத் தின்னும்.


இனப்பெருக்கம்


மார்ச் முதல் ஜூலை வரை சிறு செடிகள் முளைத்துள்ள சிற்றோடைக் கரையில் தரையில் காய்ந்த இலைதழைகளைக் குவித்து 2 முட்டைகள் இடும்.


வெளி இணைப்புகள்

நீண்டவால் பக்கி – விக்கிப்பீடியா

Jerdon’s nightjar – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.