கீவ் கரணப் புறா

கீவ் கரணப் புறா (உக்ரைனியன்: Київський світлий, Kyivskyi svitlyi) ஒரு ஆடம்பரப் புறா இனமாகும்.


மஞ்சள் கீவ் கரணப் புறா


தோற்றம்: கீவ், உக்ரைனின் தலைநகர்.


இப்புறா வளர்ப்பாளர்கள் உக்ரைன், உருசியா, சுலோவாக்கியா மற்றும் மிக அண்மையில் போர்த்துகலிலும் காணப்படுகின்றனர். மேலும் 1 அல்லது 2 வளர்ப்பாளர்கள் பிரான்ஸிலும் காணப்படுகின்றனர், ஆனால் அவர்கள் கண்காட்சி இனத்தை மட்டுமே வளர்க்கின்றனர், கரணமடிக்கும் இனத்தை அல்ல.


கருப்பு கீவ் கரணப் புறா


விளக்கம்: ஒரு பறக்கும் இனம். நடுத்தர உயரத்தில் பறந்து காரணமடிக்கக் கூடியது. நீளமான முகமும், அலகும் உடையது. இது ஒரு மெல்லிய, மென்மையான புறாவாகும்.


அளவு: சிறியது, ஒரு சாதாரண ஹோமிங் புறாவை விட சிறியது; 210 இருந்து 250 கிராம் வரை எடையுள்ளது;


ஆபரணங்கள்: ஒரு உச்ச-கொண்டையுடைய மற்றும் சிறிய இறகுகளுடன் உள்ள கால்கள் உடையது. இதன் இறக்கைகள் வால் மீது தாங்கப்பட்டுள்ளன. வால் 12 இறகுகளுடனும், ஒரு எண்ணெய் சுரப்பியுடனும் காணப்படும்.


சிவப்பு கீவ் கரணப் புறா


வண்ணங்கள்: தலை, மார்பு, கழுத்து மற்றும் கால் இறகுகள் வெள்ளையாக உள்ளன. முன்தலையில் காணப்படும் புள்ளி மற்ற உடல் பாக வண்ணங்களோடு ஒத்துப் போக வேண்டும். காளை போன்ற கண்களையும், கண்களைச் சுற்றி காணப்படும் பகுதி சதை நிறத்திலும் காணப்படுகிறது.


இவை சிவப்பு, மஞ்சள், கருப்பு, நீலப்பட்டை மற்றும் மற்ற நிறங்களில் காணப்படுகின்றன ஆனால் இவை ஒரே வகையான வண்ண அடையாளங்களைக் கொண்டிருக்க வேண்டும்.


வெளி இணைப்புகள்

கீவ் கரணப் புறா – விக்கிப்பீடியா

Kiev Tumbler – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.