சிறிய துடுப்புவால் கரிச்சான்

சிறிய துடுப்புவால் கரிச்சான் (Lesser racket-tailed drongo)(டைகுருரசு ரெமிபெர் – Dicrurus remifer) என்பது டைகுருரிடே பறவை குடும்பத்தில் உள்ள ஒரு சிற்றினமாகும். இது இந்தியத் துணைக் கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.


விளக்கம்


சிறிய துடுப்புவால் கரிச்சான் சுமார் 25 முதல் 27 ·5 செ.மீ நீளமானது. வெளிப்புற வால் இறகுகளைத் தவிர்த்து (சி. 30-40 செ.மீ வால் முடிவடையும்). ஆண்களின் சராசரி எடை 39-49 கிராமும், பெண் குருவியின் எடை 35·5-44 கிராம். இது துடுப்பு வால் கரிச்சானுடன் அடையாளங் காண்பதில் குழப்பமடையக்கூடும். ஆனால் இதன் தலையில் முகடு இல்லை.


வகைபிரித்தல்


சிறிய துடுப்பு வால் கரிச்சானில் அங்கீகரிக்கப்பட்ட துணையினங்கள் நான்கு உள்ளன


 • டை. ரெ. டெக்டிரோசுட்ரிசு (ஹோட்சன், 1836) – வட இந்தியாவில் உத்தாரகண்டம் முதல் கிழக்கு இந்தியாவில் முதல் அருணாச்சல பிரதேசம், அசாம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம்வரையிலும், வடகிழக்கு வங்கதேசம், தென் சீனா (தென்கிழக்கு ஜிசாங், மேற்கு மற்றும் தெற்கு யுன்னான் மற்றும் தென்மேற்கு குவாங்சி), மியான்மர் (தென்கடைப் பகுதி தவிர), வட தாய்லாந்து, வட லாவோஸ் மற்றும் வட வியட்நாம் (ஹுய் தென் பகுதி) காணப்படுகிறது.

 • டை. ரெ. பெரசென்சிசு (ஈ.சி.எஸ் பேக்கர், 1918) – தென் மியான்மர் (தெனாசெரிம்) மற்றும் தென்மேற்கு & தெற்கு தாய்லாந்து முதல் தீபகற்ப மலேசியாவின் வடக்கு (தெற்கு சிலாங்கூர் மற்றும் தெற்கு பகாங்), தெற்கு லாவோஸ் மற்றும் தெற்கு வியட்நாம் (தெற்கு முதல் தெற்கு அன்னம்).

 • டை. ரெ. லெபோலி (டெலாகோர் & ஜாபெளலி, 1928) – தென் கம்போடியா மலைகள் (ஏலக்காய் மற்றும் யானை வரம்புகள்).

 • டை. ரே. ரெமிபெர் (தெமினிக், 1823) – சுமத்ரா (பாரிசன் ரேஞ்ச் மற்றும் பட ஹைலேண்ட்ஸ்) மற்றும் மேற்கு ஜாவா.

 • பரவலும் மற்றும் வாழ்விடம்


  இது இந்தியத் துணைக் கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வங்காளதேசம், பூட்டான், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, இலாவோசு, மலேசியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் முழுவதும் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மான்ட்டேன் காடுகள் ஆகும்.


  வெளி இணைப்புகள்

  சிறிய துடுப்புவால் கரிச்சான் – விக்கிப்பீடியா

  Lesser racket-tailed drongo – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.