மந்திப் புறா

மந்திப் புறா (Mountain imperial pigeon) தென்கிழக்கு ஆசியாவில் பரவலாக காணப்படும் புறா வகைகளுள் ஒன்றாகும்.


பெயர்கள்


தமிழில் :மந்திப் புறா


ஆங்கிலப்பெயர் :Mountain Imperial – Pigeon


அறிவியல் பெயர் :Ducula badia


உடலமைப்பு


அதிகபட்ச உடல் நீளம் 43 செ.மீ. வரை இருக்கும். ஆலிவ் பழுப்பு நிறங் கொண்ட உடலும் வெளிர்சாம்பல் நிறத்தலையும் மார்பினையும் கொண்டது.


காணப்படும் பகுதிகள்


வடகிழக்கு இந்தியாவின் மலைப் பகுதிகளிலும் தென்மேற்கு இந்தியாவின் மலைப் பகுதிகளும் மட்டுமே இவை காணப்படும். இந்தியாவின் இடைப்பட்ட பகுதிகளில் காணப்படுவதில்லை. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பசுங்காடுகளில் காணப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000 மீட்டர் உயரம் வரை இவற்றைக் காணலாம்.


உணவு


இவை 15 முதல் 20 வரையான குழுவாகப் வாழும்; பெரிய மரங்களில் இலை தழைகளிடையே மறைந்து இரை தேடும். பழங்களையே முக்கிய உணவாகக் கொள்ளும். இது சாதிக்காயை முழுவதுமாக அப்படியே விழுங்கும் பழக்க முடையது. காலையிலும் பிற்பகலிலும் உயரக்கிளைகளில் அமர்ந்து வெயில் காயும். இது இருட்டுவதற்கு முன்பே அடையும் இடம் செல்லும். கஉயுக்கோ க்உயூக்கோ என குரல் கொடுக்கும்.


இனப்பெருக்கம்


ஜனவரி முதல் மே வரை சிறிய மங்களிலும் அவற்றில் சுற்றி வளர்ந்திருக்கும் பெரிய கொடிகளிடையும் கூடமைத்து ஒரு முட்டையிடும்.

வெளி இணைப்புகள்

மந்திப் புறா – விக்கிப்பீடியா

Mountain imperial pigeon – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.