கருப்பு புறா

நீலகிரி காட்டுப் புறா (Nilgiri Wood Pigeon) என்பது மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் ஒரு பெரிய வகை புறாவகும். இந்த புறா அடர் நிறங்களில் காணப்படுகிறது.


பெயர்கள்


தமிழில் :நீலகிரி காட்டுப்புறா ஆங்கிலப்பெயர் :Nilgiri wood – Pigeon அறிவியல் பெயர் :கொலம்பா எல்பிஸ்டோனி (Columba elphinstonii)


உடலமைப்பு


42 செ.மீ. – சிவப்பு தோய்ந்த கரும்பழுப்பு நிற உடலில். பச்சையும் ஊதாவுமான பளபளப்பு மிதமான தோற்றம் தரும். கழுத்தில் கருப்பும் வெள்ளையுமான சதுரங்கப்பலகை ஒத்த அமைப்பு உண்டு. இளஞ்சிவப்புத் தோய்ந்த சாம்பல் நிற மார்பைக் கொண்டது.


காணப்படும் பகுதிகள், உணவு


நீலகிரி, கொடைக்கானல் மலைசார்ந்த பகுதிகளில் பசுமை மாறாக் காடுகள், ஏலத் தோட்டங்களில் நிற்கும் நிழல் தரும் மரங்கள் ஆகியவற்றில் பழங்களைத் தேடித்தின்னும். அவ்வப்போது தரையில் உள்ள உதிர்ந்த பழங்களைப் பொறுக்கவும் சிறு நத்தைகளைப் பிடித்துத் தின்னவும் தரைக்கு இறங்கும். அடிக்கடி இடம் பெயரும் பழக்கம் உடையது. ஒரு வாரத்தில் ஒரு சோலையில் மிகுந்த எண்ணிக்கையில் காணப்பட்ட இது அடுத்த ஒரு வாரம் ஒன்று கூடக் கண்ணில் படாததாக அளவிற்கு இடம் பெயரும் தன்மையுடையது. ஹு ஹு எனத் தொடர்ந்து அடித் தொண்டையில் ஆந்தை போலக் குரலெழுப்பும்.


இனப்பெருக்கம்


மார்ச் முதல் ஜுலை வரை பசும் சோலைகளில் உள்ள மரங்களில் குச்சிகளால் தட்டுப்போலக் கூடமைந்து ஒரே முட்டையிடும்.


வெளி இணைப்புகள்

கருப்பு புறா – விக்கிப்பீடியா

Nilgiri wood pigeon – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.