நன் புறா

நன் புறா (Nun pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. மேலும், இவை ஐரோப்பா கண்டத்தில் ‘டச்சு ஷெல் புறா’ என்று அறியப்படுகின்றன. நன் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். நன் புறா பழமையான இனங்களில் ஒன்றாகும், இவை முதலில் ஒரு கண்காட்சி புறாவாக உருவாக்கப்படுவதற்கு முன் டம்ப்லர் புறாவாக இருந்தன.


வடிவமைப்பு


இவற்றின் கழுத்தின் பிற்பகுதியில் காணப்படும் இறகுகளால் இப்பெயரைப் பெற்றுள்ளன. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டச்சு செல் புறா என்று ஐரோப்பியக் கண்டத்தில் அழைக்கப்பட்டன. இவை டம்ப்லர் புறாக்களை ஒத்துள்ளன. from which this breed of pigeon originated; இதன் உடலானது வெள்ளைநிற சிறகுகளால் மூடப்பட்டு தலையானது கருப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் உள்ளது. தலை, வால் மற்றும் சிறகுகள் மட்டுமே இந்நிறத்தைக் கொண்டிருக்க வேண்டும். டம்ப்லர், மேக்பை மற்றும் இவ்வினம் ஆகிய மூன்றும் அதிக உயரத்தில் பறக்க வல்லவையாக உள்ளன. பிரித்தானிய நன் கிளப்பின் அளவின்படி இதன் உயரம் தலை முதல் கால் வரை 9 அங்குலமும், மார்பிலிருந்து வால் வரை 10 அங்குலமும் இருக்க வேண்டும். பெண், இளம் புறாக்களும் இதே அளவில் இருக்க வேண்டும். அலகு நேராக ஆனால் தடித்ததாக இருக்க வேண்டும், மற்றும் கண்கள் முத்து வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும்.


சார்லஸ் டார்வின் தனது “தி வேரியேசன் ஆஃப் அனிமல்ஸ் அன்ட் பிலான்ட்ஸ் அன்டர் டொமஸ்டிகேசன்” புத்தகத்தில் எப்படி நன் மற்றும் காலர் புறா (Jacobin Pigeon) புறா இனங்கள் அவை தோன்றிய மாடப் புறா இனத்தை விட குறைவான வால் முதுகெலும்புகளைப் பெற்றுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.


வெளி இணைப்புகள்

நன் புறா – விக்கிப்பீடியா

Nun pigeon – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.