கீழை சுருள் இறகு புறா என்பது ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்த புறா ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. இவை துருக்கியைச் சேர்ந்த புறா வகையாகும். இவை உதுமானியப் பேரரசர்களுக்காக மனிசா அரண்மனை, துருக்கியில் வளர்க்கப்பட்டன. மனிசா மேற்கு துருக்கியில் இருந்த உதுமானிய நகரமாகும். இது ஹங்கரி (சுல்தானின் பறவை) என்றழைக்கப்பட்டது. இவை பல வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன, இவற்றுள் பிளாண்டிநெட் மற்றும் சாடிநெட் முக்கியமானவை..
இவற்றின் முன்னோர் வகையானது இன்றும் “பழைய கீழை சுருள்” என்று பாதுகாக்கப்படுகிறது.