அடுப்புப் பறவை

அடுப்புப் பறவை (ovenbird; Seiurus aurocapilla) என்பது ஓர் பருலிடேக் குடும்ப சிறிய பாடும் பறவை. இப்பறவை அர்ஜென்டினா மற்றும் உருகுவே நாட்டின் தேசிய பறவையாக உள்ளது. இவை அடுப்பை போல் இக்கூடு அமைத்திருப்பதால் இதற்கு அடுப்புப் பறவை (ovenbird) என்ற பெயர் வந்தது.


இப்பறவையானது தங்கள் இனப்பெருக்க காலத்தில் களிமண் அல்லது மண்ணோடு நார்ப்பொருள்கள், முடி அல்லது வைக்கோல் சேர்த்து தன் கூட்டை கட்ட துவங்குகின்றன. இக்கூடானது பார்ப்பதற்கு மண்டபம் போன்ற கூரையும் அதன் உள்ளே ஒரு சிறு அறையும் காணப்படும். ஆண் பறவையும், பெண் பறவையும் இணைந்து இக்கூட்டின் சுவர்களை எழுப்புகின்றன. பெரும்பாலும் இது குளிர் காலங்களில் தன் கூட்டை கட்டத்துவங்கும். பின் அக்கூட்டின் மேல் சூரிய ஒளி பட்டு அக்கூடு கடினமான பாறை போன்று இறுகிவிடும் வரை விட்டுவிடுகின்றது. தன் கூட்டை குறுகிய மற்றும் வளைந்த நுழைவு வாயிலை அமைக்கும். அக்கூட்டின் உள்ளே தடுப்புச் சுவர் ஒன்றை எழுப்பி இனப்பெருக்க அறையை உருவாக்கும். அதில் பெண் பறவை முட்டை இடுவதற்கு ஏதுவாக இலைகள், சிறகுகளைக் கொண்டு நிரப்பிவிடும். இப்படி செய்வதற்கு இப்பறவைகளுக்கு சில மாதங்கள் ஆகலாம். இனச்சேர்க்கைக்கு பிறகு இப்பறவைகள் 3 முதல் 5 முட்டைகள் வரையிடும்.அம்முட்டைகளை அடைகாத்து 20 நாட்களுக்கு பிறகு குஞ்சு பொரிக்கும். குஞ்சுகளின் இறக்கைகள் வளர 18 நாட்களும், தன் பெற்றோருடன் 3 மாத காலமும் அக்கூட்டில் தங்கி இருக்கும்.


இப்பறவைகள் மெக்சிகோ, மத்திய மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் பறவைகளின் ஒரு பெரும் பகுதிகளாக வாழ்கின்றன. இவைகள் நகரின் புறநகர் பகுதிகளிலும் காணலாம். ஆண் பறவையும், பெண் பறவையும் தங்களுக்கென்று ஒரு தனிபட்ட பாடல் முலம் அறிந்துகொள்கின்றன. அவை “சர்-டி… சர்-டி…” என்ற ஒளியை எழுப்புகின்றன.


1916 இல் ராபர்ட் பாரஸ்ட் எனும் கவிஞர் தனது கவிதையில் அடுப்புப் பறவை பற்றிக் குறிப்பிடுகிறார்.


வெளி இணைப்புகள்

அடுப்புப் பறவை – விக்கிப்பீடியா

Ovenbird – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.