கிளிஞ்சல் பிடிப்பான்

கிளிஞ்சல் பிடிப்பான் (Oystercatchers) என்பது ஒரு பறவையினமாகும். இது ஹேமடோபோடிடே குடும்பத்தை சார்ந்தது. இவை பொதுவாக துருவப் பகுதிகளைத் தவிர உலகெங்கிலும் உள்ள கடற்கரைப் பகுதிகளிலும் ஆப்பிரிக்கா மற்றும் தென் கிழக்காசிய வெப்ப மண்டலப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. விதிவிலக்காக இவற்றில் யூரேசிய கிளிஞ்சல் பிடிப்பான், தெற்குத் தீவு கிளிஞ்சல் பிடிப்பான் ஆகியவைகள் சில நேரங்களில் நாட்டின் உட்பகுதியிலும் காணப்படுகின்றன. இவற்றில் மூன்று இனங்கள் உள்ளன. இந்த மூன்று பறவையினங்களும் ஒன்றுக்கொன்று வகைபடுத்த முடியாத உயிரினங்களாகும். ஆனாலும் இந்த மூன்று பறவையினங்களும் ஓரே உயிரினமாகவேவே கருதப்படுகின்றன..


பெயரியல்


இப்பறவைகள் கிளிஞ்சல்களை உண்பதால் இதற்கு கிளிஞ்சல் பிடிப்பான் எனவும் 1731 ஆம் ஆண்டில் மார்க் கேட்ஸ்பே என்பவரால் வட அமெரிக்க உயிரினமெனவும் பொதுவாக வகைப்படுத்தப்பட்டது. 1843 -இல் வில்லியம் யாரல் என்பவரால் இப்பறவையின் பழைய பெயரான ஸீ பை என்ற பெயருக்கு மாற்றாக கிளிஞ்சல் பிடிப்பான் எனப்பெயரிடப்பட்டது.. இந்த பறவையினத்தினைக் குறிக்கப்பயன்படும் ஹெமடோபஸ் என்ற பெயர் (ஹைமா- இரத்தம்,பௌஸ்-பாதம்) இரத்தநிறப் பாதம் எனப்பொருள்படும் பழங்கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்.


உடலமைப்பு


பல்வேறு இனங்களை கொண்ட கிளிஞ்சல் பிடிப்பான்கள் தோற்றத்திலும் வடிவத்திலும் சிறிய அளவில் மாறுபட்டவை. அவற்றின் சிறகுகளின் நீளத்திலும் வேறுபட்டவையாக உள்ளன. . இவை மற்ற எல்லா உயிரினங்களை விடவும் எடை குறைந்தே காணப்படும். இதன் உடல் கீழ் பகுதி வெள்ளையாகவும் மேல் பகுதி அனைத்தும் கருமையாகவோ அல்லது அடர் கருமையாகவோ காணப்படும்.. இப்பறவையினங்களில் சற்றே விதிவிலக்காக சில பறவைகள் உடலனைத்தும் கருப்பாகவும் அல்லது பல வண்ணங்களாலும் காணப்படும். இது உணவை உண்பதற்கும் நொறுக்குவதற்கும் ஆரஞ்சு அல்லது சிவப்பு அலகினை ப்ளோவர் என்ற பறவையை விட மிக பெரியதாக கொண்டிருக்கும். இவை உணவை உட்கொள்வதற்கேற்றவாறு இதன் அலகுகள் பல்வேறு வகையாக காணப்படுகின்றன. இம்மாதிரிப் பறவைகள் கிளிஞ்சல்களை நொறுக்கித்தூளாக்குவதற்கு கத்தி போன்ற கூர்மையான அலகினை கொண்டிருக்கும். மேலும் புழுக்களை தனியே பிரித்தறியவும் இம்மாதிரி அலகுகளை பயன்படுத்தும். ஆண் பறவையினங்களைவிட பெண் பறவையினங்களின் அலகுகள் மிக நீண்டதாகவும் வலிமையாகவும் இருக்கும்.


உணவுமுறை


கிளிஞ்சல் பிடிப்பான்களின் உணவு முறைகள் இடத்திற்கு தகுந்தால் போல மாறுபடும். நாட்டின் உட்பகுதிகளில் வாழ்பவை பூச்சிகள் மற்றும் லார்வாக்களை உண்ணும். அதே சமயம் கடலோர கிளிஞ்சல் பிடிப்பான்களின் உணவு முறைகள் முற்றிலும் மாறுபட்டு காணப்படும். இவ்வகை இனங்கள் தங்கள் உணவில் ஈஸ்டுகள் மற்றும் புழுக்களை மிக முக்கியமான பகுதியாக கொள்ளும். அதேசமயம் கரையோரப் பாறைகளில் வசிக்கும் இந்த இனங்கள் கடற்சங்குகள், மீன், மற்றும் நண்டுகள் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும்.


இனப்பெருக்கம்


அனைத்துவகை கிளிஞ்சல் பிடிப்பான் இனங்களிலும் பொதுவான யுரேசிய கிளிஞ்சல் பிடிப்பான்களின் கலப்பு தென்படுகிறது. இவற்றில் சிலவகை இனங்கள் இனப்பெருக்கக் காலங்களில் வருடம் முழுவதும் ஒரே இடங்களில் தங்கியிருக்கும்..அவற்றில் ஒரு சில 20 ஆண்டுகளாக அதே இடத்தில் தன்னுடைய இணையுடன் நீண்டகாலம் வசிப்பது ஆய்வுகள் மூலம் நமக்குத் தெரியவருகிறது. இவைகள் இனப்பெருக்கக் காலங்களில் கோடை காலம் முழுவதும் தன்னுடைய இணையுடன் ஒரே கூட்டில் வசிக்கும். நிலத்தின் அடியில் வரிசையாகவும் நன்கு பார்வையில் படுமாறும் ரகசியமான இடத்திலும் இவை தன்னுடைய முட்டைகளை அடைகாக்கும். ஒன்றிலிருந்து நான்கு முட்டைகளுக்கிடையே, மூன்று வட அரைக்கோளத்திலும் ,இரண்டு தென்திசையிலும் காணப்படும். பெண் இனங்கள் பொதுவாக தன் முட்டையினை நீண்ட காலத்திற்கு அடைகாக்கும்.ஆண் இனங்கள் சுற்றுப்புறத்தை பாதுகாக்கும். அடைகாக்கும் காலமானது 24 நாட்கள் முதல் 39 நாட்கள் வரை இனத்திற்கினம் வேறுபடும். சில நேரங்களில் இப்பறைவைகள் குயில்களைப் போலவே ஸீகல்ஸ் போன்ற உயிரினங்களின் கூட்டிலும் தன்னுடைய முட்டைகளையிடும்.


வெளி இணைப்புகள்

கிளிஞ்சல் பிடிப்பான் – விக்கிப்பீடியா

Oystercatcher – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.