உப்புக்கொத்திகள்

உப்புக்கொத்தி (Plover) என்பது உலகின் பலப்பகுதிகளில் காணப்படும் ஒரு வகை நீர்பறவையாகும்.


பொதுதகவல்


உப்புக்கொத்தி என்பது, உலகின் ஒருசில இடங்களைத் தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் காணப்படும் நீர்நிலைகளைச் சார்ந்த ஒருவகைப் பறவைகளாகும். இவை நீர்நிலைகளில் காணப்படும் தலைப்பிரட்டைகள், மீன்கள், நத்தைகள், புழுக்கள் போன்றவைகளை கொத்தி உண்ணும். தலைக்கு தொடர்பில்லாதது போலத் தெரியும் அலகு குட்டையான கால்கள் என்று தனித்துவமான உடலமைப்பு கொண்டது இந்தப் பறவைகள். உப்புக்கொத்திகளில் சிலவகை கொத்திகள் வலசை போதல் போகும் இயல்பைக் கொண்டவை.


பட்டாணி உப்புக்கொத்தி


பரவலாக தமிழ்நாட்டில் காணப்படும் உப்புக்கொத்தி வகை இது. சின்ன கோழி அளவில் இருக்கும். மஞ்சள் நிற கால்கள் + வெளிறிய பழுப்ப முதுகுப் பகுதி வெள்ளை அடிவயிற்றைக் கொண்டிருக்கும். கழுத்தில் கருப்பு – காலர் போன்ற அமைப்பு காணப்படும். மிக முக்கியமாக, கண்ணைச் சுற்றியிருக்கும் மஞ்சள் நிற வளையம் – இதன் தனித்துவமான அடையாளம்.


மணல் நிற உப்புக்கொத்தி


lesser sand plover


இது வலசை போகும் வகையைச் சார்ந்த உப்புக்கொத்தி. கடல் ஓரங்களில் பார்த்திருக்கலாம். தமிழ்நாட்டில் கோடியக்கரை, புலிகாட் பகுதிகளில் அதிகளவில் இப்பறவை வலசை காலங்களில் காணமுடியும். பாசி படர்ந்த அடர் சாம்பல் நிறக் கால்கள். வெள்ளை நிற அடிவயிற்றைக் கொண்டது.


வெளி இணைப்புகள்

உப்புக்கொத்திகள் – விக்கிப்பீடியா

Plover – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.