சாம்பல் நெற்றிப் புறா

சாம்பல் நெற்றிப் புறா (Pompadour Green– Pigeon, Treron pompadora) தெற்கு மறும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு சிற்றினம் ஆகும்.


உடலமைப்பு


28 செ.மீ. – சாம்பல் நிறத்தலையும், நெற்றியும் செம்பழுப்பு நிற முதுகும் பசுமை தோய்ந்த மார்பும் ஆலிவ் பழுப்பான வாலிறகுகளும் கொண்டது. பெண் பறவையின் முதுகு செம்பழுப்புக்குப் பதிலாக ஆலிவ் தோய்ந்த பச்சையாக இருக்கும்.


காணப்படும் பகுதிகள்


மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில் சமதரை முதல் 1200 மீ வரை பசுங்காடுகளைச் சார்ந்து மரங்கள் பழுக்கும் பருவத்திற்கேற்ப இருப்பை மாற்றிக்கொண்டு திரியக் காணலாம்.காபித் தோட்டங்களில் காணப்படும் இது அங்கு அமைந்துள்ள சுண்ணாம்பு பூசப்பட்ட பங்களாக்களின் சுவர்களில் முட்டி மோதி இறப்பது அடிக்கடி நிகழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உணவு


10 முதல் 12 வரையான குழுவாக அத்தி, ஆல், சூரை முதலான மரங்களில் பழங்களைத் தேடித் தின்னும். காலையிலும் மாலையில் அடைவதற்கு முன்னும் காடுகளின் எல்லையில் நிற்கும் பெரிய மரங்களின் இலைகளற்ற நுனிக்கொம்புகளில் கூட்டமாக அமர்ந்து இனிய சீழ்க்கைக் குரல் கொடுக்கும் பழக்கம் கொண்டது.


இனப்பெருக்கம்


டிசம்பர் முதல் மார்ச் முடிய நடுத்தரமான மரங்களில் குச்சிகளால் மேடை அமைப்பில் கூடமைத்து 2 முட்டைகள் இடும்.


படங்கள்

வெளி இணைப்புகள்

சாம்பல் நெற்றிப் புறா – விக்கிப்பீடியா

Pompadour green pigeon – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.