சிவப்புத்தாரா அல்லது கருட தாரா அல்லது செங்கிளுவை (Ruddy shelduck – Tadorna ferruginea) என்பது அனடீடி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இதன் சராசரி நீளம் 58-70 செ.மீ (23-28 அங்குலம்), இறக்கை நீட்டம் 110-135 செ.மீ (43-53 அங்குலம்). இது செம்மஞ்சள்-பழுப்பு நிற உடலையும், சிறிது மங்கலான நிறத்தில் தலைப் பகுதியையும் கொண்டது, கறுப்பு நிறத்தில் வால், மற்றும் பறக்கும் சிறகுப் பகுதிகளையும் கொண்டது. இது ஒரு இடப்பெயர்வுக்கு உள்ளாகும் பறவையாதலால், குளிர் காலத்தில் இந்திய துணைக்கண்டத்திலும், இனப்பெருக்க காலத்தில் தென்கிழக்கு ஐரோப்பா மற்றும் நடு ஆசியாவிலும் வாழும். வட ஆப்பிரிக்காவிலும் இவற்றின் சிறிதளவு சனத்தொகை இருக்கிறது. அத்துடன் பெரிய சத்தத்தை ஏற்படுத்தும் பறவைகளாகும்.
About the author
Related Posts
September 29, 2021
ஆலனின் பெரிய காது வெளவால்
September 16, 2021
கருஞ்சிறுத்தை
September 21, 2021