செயிண்ட் எலனா கொண்டலாத்தி (Saint Helena Hoopoe ), செயிண்ட் எலனா பெரும் கொண்டலாத்தி அல்லது பெரும் கொண்டலாத்தி என்று அழைக்கப்படுவது உப்பிடே குடும்பத்தில் அழிந்துபோன உப்புபா அண்டாய்சுன்(Upupa antaios) எனும் சிற்றினப் பறவையாகும். இந்தப் பறவையானது முழுமையற்ற எலும்புக்கூடு படிமத்தின் வழியே அறியப்படுகிறது. கடைசியாக இந்தப் பறவை 1550ஆம் ஆண்டில் காணப்பட்டது.
இது தெற்கு அட்லாண்டிக்கில் உள்ள செயிண்ட் எலனா தீவுக்குச் சொந்தமானது. இது பெரும்பாலும் பறக்க இயலா பறவை போன்றே காணப்பட்டது. இந்த சிற்றினங்கள் குறித்த முதல் பகுப்பாய்வைப் இங்கிலாந்து விலங்கியலார் பிலிப் ஆசுமோல் 1963இல் மேற்கொண்டார். கிழக்கு செயின்ட் எலினாவில் உலர் குடல் வண்டல் இல் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட மேற்கையின் நீண்ட எலும்பு மற்ற உப்பிடே குடும்ப உறுப்பினர்களிடமிருந்து வேறுபாடுடையதாக இருந்தது.
1975ஆம் ஆண்டில் தொல்லுயிரியல் நிபுணர் ஸ்டோர்ஸ் எல். ஓல்சன் கோராகாய்டுகள் மற்றும் இடது தொடையுடன் கூடிய முழுமையற்ற எலும்புக்கூட்டினைக் கண்டுபிடித்தார்.