சின்னத்தோல் குருவியானது ( pratincole ) குடும்பத்தை சார்ந்த ஒரு கரையோரப் பறவையாகும்.
பெயர்கள்
தமிழில் :சின்னத்தோல் குருவி
ஆங்கிலப்பெயர் :Small Pratincola
அறிவியல் பெயர் : Glareola lactea
உடலமைப்பு
17 செ.மீ. இதன் மார்பு வெளிர் பழுப்பாகவும் வயிறு வெண்மையாகவும் இருக்கும். அலகில் அடியிலிருந்து கண்வரை செல்லும் கருப்புப்பட்டை கொண்டது.
காணப்படும் பகுதிகள்
மணல் திட்டுக்கள் கொண்ட அகன்ற ஆற்றுப் படுகைகளில் பெரும் எண்ணிக்கையில் காணப்படும் இது கடற்கரை சார்ந்த மணல் பாங்கான பகுதிகளிலும் திரியும். திருச்சியை அடுத்த கொள்ளிடம் காவேரி, ஆகியவற்றிலும், பாலாற்றிலும் நீர் வற்றும் சமயத்தில் ஆயிரக் கணக்கில் காணலாம்.
உணவு
பறக்கும் பூச்சிகள் கறையான், தத்துக்கிளி ஆகியன முக்கிய உணவு இருட்டும் வரை மாலை நேரங்களில் வௌவாலைப் போல அப்படியும் இப்படியுமாகத் திரும்பித் திரும்பிப் பறந்து பறக்கும் பூச்சிகளை வேட்டையாடும்.
இனப்பெருக்கம்
பிப்ரவரி முதல் ஏப்ரல் முடிய ஆற்றில் மணல்பரப்பில் நீரருகே பலவும் குழுவாக ஆற்று ஆலாக்கள் இனப் பெருக்கம் செய்யும் பகுதிகளில் 2 முட்டைகள் இடும். முட்டைகள் மணல் நிறத்தோடு ஒத்துப் போவதால் கண்டு கொள்வது கடினம். அடைகாக்கும் பறவைகள் முட்டைகளிலிருக்கும் இடம் செல்பவர்களை இறக்கை ஒடிந்து விட்டதைப்போலத் தத்தித் தடுமாறி திசை திருப்பப் பார்க்கும். கூட்டமாக டிரிடிரி டிட் டிரிடிரி டிட் எனக் கத்தியபடி தலைக்குமேல் பறந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும்.