மலை நாகணவாய் [Southern hill myna (Gracula indica)] நாகணவாய் வகையைச் சார்ந்த ஒரு பறவையாகும். இது தென்மேற்கு இந்தியாவில் நீலமலையிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் இலங்கையிலும் மட்டும் காணப்படுகிறது.
உடலமைப்பு
23 cm முதல் 24 cm நீளம் இருக்கும். தலைப்பகுதி மங்கிய கருப்பு, உடலும் இறக்கைகளும் பச்சையும் ஊதாவும் கலந்த கருப்பு. முதன்மை இறக்கைகளில் வெண்ணிறத் திட்டு காணப்படும். செம்மஞ்சள் நிற அலகின் நுனி மஞ்சளாக இருக்கும். கால்களும் பாதங்களும் மஞ்சள் நிறம்.
கள அடையாளங்கள்
இப்பறவையின் பரவலில் காணப்படாத இன்னொரு மலை நாகணவாயான Gr. religiosa-வை விட அளவில் சிறியதாகவும் இதன் அலகு அதனை விட மெல்லியதாகவும் இருக்கும். பிடரியின் தசைத் தொங்கல் தலையின் உச்சி வரை நீண்டிருக்கும். மேலும், கண்ணுக்குக் கீழே தசைத் தொங்கலின் இரு நாக்குகளும் ஓட்டுப் பகுதியில்லாமல் இருக்கும்
இதன் அளவையொத்த, இதன் பரவலில் காணப்படும் இன்னொரு மலை நாகணவாயான இலங்கை நாகணவாயிற்கு (Gr. ptilogenys) இப்பறவையைப் போல கன்னங்களிலும் தலையுச்சியிலும் தசைத் தொங்கல் இருக்காது; மேலும், இலங்கை நாகணவாயிற்கு அலகின் அடிப்பகுதி கருப்பாக இருக்கும்.
வெளி இணைப்புகள்
மலை நாகணவாய் – விக்கிப்பீடியா
Southern hill myna – Wikipedia