புள்ளிச் செங்கால் உள்ளான்

புள்ளிச் செங்கால் உள்ளான் (Spotted redshank – Tringa erythropus) என்பது சுகோலோபசிடே என்ற பெரிய பறவைகள் அடங்கிய குடும்பத்தில் உள்ள ஒரு கரையோரப் பறவை ஆகும். இப்பறவையின் பேரினப் பெயர் Tringa என்பது ஆற்று உள்ளானுக்கு கொடுக்கப்பட்ட பெயராகும்; இனப்பெயரான erythropus என்பது பண்டைய கிரேக்கச் சொல்லான eruthros, அதாவது, “சிவப்பு”, மற்றும் pous, அதாவது “கால்” இவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளது.


பரவல்


இவ்வுள்ளான் வட ஸ்காண்டிநேவியா, வட ஆசியப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து குளிர் காலத்தில் பிரித்தானியத் தீவுகளின் தென் பகுதி, பிரான்சு, மெடிட்டரினியன் பகுதி, வெப்ப மண்டல ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதிகளுக்கு வலசை போகிறது. இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு வலசை வரும் இப்பறவை, தமிழகத்தின் வட பகுதிகளில் அவதானிக்கப்பட்டுள்ளது.


களக்குறிப்புகள்


29 – 32 செமீ அளவு உடையது. அலகு முடியும் இடமும் கால்களும் சிகப்பாக இருக்கும். இதன் அலகு பவளக்காலியின் அலகை விட நீளமாக இருக்கும்; இனப்பெருக்கம் இல்லாத காலத்தில் இறக்கையின் மேல் புறம் வெளுத்த சாம்பல் நிறத்திலும் கீழ் புறம் பவளக்காலியை விட வெள்ளையாக இருக்கும். ஆனால் இனப்பெருக்க காலத்தில் (முக்கியமாக) கீழ்ப்பாகங்கள் கருப்பாக இருக்கும். டூ யிக் என்ற வேறுபட்ட சத்தத்துடன் பறந்து போகும்.


வெளி இணைப்புகள்

புள்ளிச் செங்கால் உள்ளான் – விக்கிப்பீடியா

Spotted redshank – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.