சாதாரண தையல்சிட்டு,… .
தையல்சிட்டு அல்லது தையல்காரக் குருவி என்பது சிறிய பறவை ஆகும். தையல்சிட்டு சிறிய வட்ட வடிவ சிறகுகளையும், உறுதியான கால்களையும், நீண்டு வளைந்த அலகையும் கொண்டு காணப்படும். செங்குத்தான இதன் வால் தனித்தன்மையானது. இவை கானகத்திலும் குறுங்காடுகளிலும் தோட்டங்களிலும் காணப்படும்.
தையல்சிட்டு என்னும் பெயர் கூடுகட்டும் விதத்தினைக் கொண்டு அமைந்த காரணப் பெயராகும். பெரிய இலைகளின் ஓரங்களை துளையிட்டு தாரவ நார் மற்றும் சிலந்திகளின் கூட்டை பயன்படுத்தி தையல்சிட்டு தன் கூட்டை தைத்து அமைக்கிறது.