பேசும் பறவை

மனிதர்களின் பேச்சைக் கேட்டு அதை திருப்பிச் சொல்லக் கூடிய பறவைகளை பேசும் பறவைகள் என அழைக்கின்றனர். இத்தகைய பறவைகளால மனிதர்களின் மொழியை புரிந்துகொள்ளும் திறன் இருக்குமா என்பதையும் அறிவியலாளர்கள் ஆய்ந்து வருகின்றனர். சிலவகை பறவைகளால் சில சொற்களை மட்டுமே நினைவில் கொண்டு சொல்ல முடியும். சிலவகை பறவைகள் சில நூற்றுக்கணக்கான சொற்களை நினைவில் கொண்டு பேசக்கூடிய திறன் கொண்டவை. இவற்றில் கிளிகளும் சில வகை மைனாக்களும் குறிப்பிடத்தக்கன. மலை மைனா என்ற பறவைக்கு அதிக பேச்சுத் திறன் உள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர்.


பேசக் கற்கும் திறன்


இளைய பறவைகள், தங்களைவிட பெரிய பறவைகளின் பேச்சைக் கேட்டு அதைப் போலவே பேசிப் பழகுகின்றன. இதை சமூகப் பரிமாற்றம் என்கின்றனர். பறவைகளுக்கு பேசுவதற்கான உடலமைப்பு இல்லாததால், ஒலிகளை மட்டுமே எழுப்பி தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன.


பாடும் பறவைகள் என்ற வகையைச் சார்ந்த பறவைகளும் கிளிகளும் மனிதர்களின் பேச்சைக் கேட்டு எளிதில் பேசுகின்றன. வீட்டில் வளர்க்கும் பறவைகளிடம், அவற்றின் முதலாளிகள் பேசுவதால், அவை சில சொற்களை நினைவில் கொள்கின்றன. இவற்றை காட்டில் விட்டால், காட்டில் உள்ள பறவைகளும் சொற்களை உச்சரிக்கின்றன. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பூங்காக்களில் திரியும் கிளிகள், அடிப்படையான சில சொற்களைப் பேசுகின்றன.

வெளி இணைப்புகள்

பேசும் பறவை – விக்கிப்பீடியா

Talking bird – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.