டிப்லர் புறா

டிப்லர் புறா (Tippler pigeon) போட்டிகளில் பங்கேற்க உருவாக்கப்பட்ட இனமாகும். இப்புறாக்கள் தொடர்ந்து 22 மணி நேரம் பறந்ததற்கான தகவல்கள் உள்ளன.


தோற்றம்


இவ்வினம் மத்தியத்தரைக் கடலுக்கும், சீனாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாடப் புறாவிலிருந்து பரிணமித்தது. இவை மத்திய கிழக்கு நாடுகளில் உருவானதாகவும் சொல்லப்படுவது உண்டு. இவை தோன்றிய பகுதி குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதின்படி இவை ஹோமிங் புறா மற்றும் குமுலெட் புறாவிலிருந்து தோன்றின. இந்த குறுக்கு வளர்ப்பு முறையானது பறவையின் பொறுமையை மேம்படுத்த மற்றும் ஒரு பெரிய பறத்தல் வரம்பிற்காகவும் என கருதப்பட்டது. இந்த நீண்ட கால பறக்கும் திறன் தேர்வு அதன் முன்னோர்களின் தரையில் நடக்கும் திறனை அகற்ற உதவியது என்று முன்மொழியப்பட்டது. இவ்வினம் இங்கிலாந்தின் கிழக்கு செசயரில் உள்ள பட்டு நெய்யும் நகரங்களான காங்லடன் மற்றும் மக்கிலெஸ்ஃபீல்டுக்கு அருகில் தோன்றியதாக நம்பப்படுகிறது. இதன் வளர்ப்பாளரின் நோக்கமானது பட்டாம்பூச்சி போலப் பறக்கும் புறாக்களின் செயல்பாட்டைப் பூரணமாக்குவதாகும்.


வகைகள்


டிப்லர் புறா வகைகளுக்குத் தங்கள் வளர்ப்பவர்கள் அல்லது அவற்றின் இடத்தின் பெயர்கள் சூட்டப்பட்டன. இந்த வகையின் பெரும்பாலான புறாக்களால் 19 மணி நேரத்திற்கு வானில் தொடர்ந்து இருக்க முடியும். டெர்பி என்ற இடத்தில் கார்டன் ஹியூக்ஸின் “ஹியூக்ஸ்” வகைப் புறாக்கள் 1976ல் 18:07 மணி நேரம் வானில் பறந்தன.[சான்று தேவை]


ஹேன்ட்ஸ்வொர்த் என்ற இடத்தில் ஜாக் போடனின் “போடன்” வகைப் புறாக்கள் 1975ல் 20:40 மணி நேரம் வானில் பறந்தன.[சான்று தேவை]


“சாம் பில்லிங்கம்” பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம், ஆர்தர் நியூட்டன், ஜோ டேவிஸ் மற்றுக் ஜாக் ஹாலந்து உள்ளிட்டோர் இங்கிலாந்தின் முதன்மையான புறா வளர்ப்பாளர்கள் ஆவர்.[சான்று தேவை]


மற்ற இனங்கள் “லோவட்” பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம், “மெரடித்” பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம், சனான்(ஐரிஸ் டிலைட் என்றும் அழைக்கப்படுகின்றன) மற்றும் செபீல்டு (இவை பொதுவாக சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும்).[சான்று தேவை]


பயிற்சி


டிப்லர்கள் புத்திக்கூர்மையுள்ள இனமாகும். நீண்ட நேரம் வானத்தில் பறக்கவும் மற்றும் வேண்டும்பொழுது கீழிறங்குமாறும் அவற்றைப் பயிற்றுவிக்க முடியும்.


போட்டிகள் மற்றும் பறத்தல் விதிகள்


ஹோமிங் புறாக்கள் இலக்கை அடையவும், கர்ணப் புறாக்கள் கரணமடிக்கவும், டிப்லர் புறாக்கள் நீண்ட நேரம் வானில் பறக்கவும் உருவாக்கப்பட்டன. டிப்லர் புறா வளர்ப்பாளர்கள் பயணம் செய்யாமல் உலகில் எவ்விடத்தில் இருந்தவாறும் போட்டியிட முடியும். ஒரு கிட் என்பது 3 அல்லது அதற்கு மேற்பட்ட புறாக்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு டிப்லர் சங்கமும் பறக்கும் விதிகளை வரையறுத்துள்ளது. அவற்றின் நோக்கம் பொதுவாக, முழு கிட்டையும் முடிந்தவரை நீண்ட நேரம் பறக்க வைப்பதாகும். ஒரு புறா இறங்கும்போதோ, வளர்ப்பாளர் கீழிறங்க சைகை காட்டும்போதோ போட்டி முடிவடைகிறது. பொதுவாக, பறவைகள் அவை உண்மையிலேயே பறக்கின்றன என உறுதி செய்ய நடுவரால் ஒவ்வொரு மணி நேரமும் பார்க்கப்பட வேண்டும். பெரும்பாலான சங்கங்கள் “NTU பறக்கும் விதிகளை” தமது அடிப்படையாக கொண்டுள்ளன.


போட்டிகளில் இளம் பறவைகள் மற்றும் பழைய பறவைகள் என இரு வகைகள் உள்ளன. இளம் பறவைகள் என்பவை ஒரு வருடத்திற்குள் பொரித்தவை, மற்றவை பழைய பறவைகளாகக் கருதப்படும். முதல் பழைய பறவைகளுக்கான போட்டி வழக்கமாக ஏப்ரல் மத்தியிலும், மற்றவை 2 வார இடைவெளியிலும் நடைபெறும். இதில் முக்கியமான போட்டியானது வருடத்தின் நீண்ட பகல்நா உள்ள நாளில் நடைபெறுகிறது.


சர்வதேச சாதனைகள்


 • சர்வதேச முடிவுகள் 2007 பரணிடப்பட்டது 2008-12-01 at the வந்தவழி இயந்திரம்
 • வெளி இணைப்புகள்

  டிப்லர் புறா – விக்கிப்பீடியா

  Tippler – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.