உக்ரைன் ஸ்கைகட்டர் (போலந்து ஓர்லிக்) பறத்தலுக்காக வளர்க்கப்படும் ஒரு டிப்லர் புறாவாகும். இது மாடப்புறாவின் ஒரு வகையாகும். இவை பல நுற்றாண்டு தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.
வரலாறு
இவை தெற்கு உக்ரைனின் கிரிமியா பகுதியில் தோன்றின. இவற்றின் முதல் பதியப்பட்ட வரையறையானது மிகோலயேவ் நகரில் உருவாக்கப்பட்டது.
இரகங்கள்
இவை நிகோலஜெவ்ஸ்கி பொகட்ஸி மற்றும் நிகோலஜெவ்ஸ்கி டோர்சோவி இனங்களின் குழுவாகும்.
பறத்தல்
இவை ஒரு கி.மீ. உயரத்திற்கு பறக்கக் கூடியவை, அதே உயரத்தில் சில நேரம் இருக்கக் கூடியவை.இவை கர்ணப் புறாக்களைப் போல் சுற்று வட்டத்தில் பறக்காமல், நேரே கூட்டில் இருந்து உயரே பறக்கக் கூடியவை.[சான்று தேவை]