உரல் கோடிட்ட பிடரி புறா

இவை கழுத்தில் காணப்படும் நிறப்புள்ளி (பிடரி) காரணமாக இப்பெயர் பெற்றன.


தோற்றம்


கோடிட்ட பிடரி புறாக்கள் உரல் பகுதிக்கு 18ம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்டன. இவை கவுன்ட் ஒர்லாபின் புறாக் கூடுகளில் வளர்க்கப்பட்டன.


வெளிப்புற தோற்றம்


சிறிய உருவம், மார்பிலிருந்து வால் வரை 25 செ.மீ. நீளம். நெறிப்படுத்தப்பட்ட உடல். குட்டையான கழுத்து. அகன்ற மார்பு. வாலுக்கு நேரான அகன்ற முதுகு.


 • தலை: உருண்டை, அகலமான நெற்றி. தலை எலும்பின் மேற்பகுதி பலவீனமாக உருப்பெற்றுள்ளது. மண்டை ஓட்டின் பின் பகுதி உருளை மற்றும் கழுத்துடன் மெதுவாக இணைந்துள்ளது.

 • கண்கள்: கருப்பு நிறத்தவை.

 • அலகு: குட்டையானது (7–10 மி.மீ.), மெல்லியது, இறுக்கமாக மூடப்பட்டுள்ளது. வெண்ணிற அலகு.

 • அலகுப்பூ: சிறியது, மெல்லியது, அலகுக்கு எதிராக இறுக்கமானது.

 • கண்ணிமை: குறுகிய, மெல்லிய, வெண்ணிறமானது.

 • கழுத்து: குட்டையானது, பலமானது.

 • மார்பு: அகலமானது, நன்றாக வளர்ந்தது.

 • முதுகு: நேரானது, தோள்பட்டையில் அகலமானது.

 • சிறகுகள்: உடல் எதிரான இறுக்கமானவை, வாலின்மேல் தாங்கப்பட்டுள்ளன மற்றும் 1–2 செ.மீ. வாலைவிட குட்டையானவை.

 • வால்: நேரான, இறுக்கமான 12 இறகுகள். அகலமான இறகுகள். வாழும், முதுகும் நேராக உள்ளன.

 • கால்கள்: குட்டையானவை, கருஞ்சிவப்பு நிறம், அடிக்கால் எலும்பில் இருந்து குதிகால் வரை 2.5 செ.மீ. வெண்ணிற நகங்கள்.

 • இறகு அலங்காரங்கள்: இல்லை.

 • இறகு தரம்: தோகை இறுக்கமாக உள்ளது.

 • வண்ணம்


  வெள்ளை.


  முறை


  தலை எலும்பின் மேற்பகுதியில் 10 மி.மீ. அளவில் ஒரு நிறப்புள்ளி. கழுத்தின் பிற்பகுதியில் “சிவப்பு நிறப்புள்ளி அல்லது பிடரி” உள்ளது. பிடரி சமச்சீராக கழுத்தின் பின்புறம் கீழே செல்கிறது. பிடரி முட்டை, பிறை அல்லது முக்கோணம் போன்ற வடிவில் இருக்கலாம். சிவப்பு நிற வால் மற்றும் வாலில் 2-3 செ.மீ. அகல வெண்ணிற கோடு. வாலின் கீழ் பகுதி வெள்ளை அல்லது சிவப்பு. மற்றபடி வெள்ளை நிறப் புறாவாகும். பெண் புறாக்களில் வாலிலுள்ள வெண் கோடு குறுகலாக உள்ளது.


  அனுமதிக்கப்பட்ட குறைபாடுகள்


  நிற “தொப்பி” சற்றே தலை எலும்பின் மேற்பகுதி இருந்து “தவறிவிடுதல்”. நிற பிடரி முதுகிலிருந்து கீழே செல்லுதல். பிடரி வடிவில் முக்கியமற்ற குறைபாடுகள். வாலின் கீழ் பகுதியில் மங்கலான வெள்ளைக் கோடு. வெள்ளை நிற கண்கள். மங்கலான சாம்பல் நிற வால்.


  அனுமதிக்கப்பட முடியாத குறைபாடுகள்


  குறுகிய தலை. அலகு 10 மி.மீ.க்கும் நீளமாக இருத்தல்.கொண்டைகள், இறகு நிறைந்த கால்கள். வேறுபட்ட நிற கண்கள். வாலில் தாங்கப்படாத சிறகுகள்.பிடரி இறகுகளில் அல்லது இரைப்பையில் காணப்படுதல். பெரிய உடலமைப்பு. வாலில் வெண்ணிற இறகுகள். சிறகுகளிலும், உடலிலும் வண்ணத்துடன் இருத்தல். வெண்கோடு வாலில் இல்லாமல் இருத்தல். தலை எலும்பின் மேற்பகுதியில் நிறப்புள்ளி இல்லாமல் இருத்தல். கழுத்தில் பிடரி இல்லாமல் இருத்தல்.


  வெளி இணைப்புகள்

  உரல் கோடிட்ட பிடரி புறா – விக்கிப்பீடியா

  Ural Striped-maned pigeon – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.