மூலவர்:
புற்றிடங்கொண்டீசர்
உற்சவர்:
புற்றிடங்கொண்டீசர்
அம்மன்/தாயார்:
பூங்கோதையம்மன்
தல விருட்சம்:
வில்வம்
ஆகமம்/பூஜை :
திருமுறை நெறியில்
புராண பெயர்:
ஒற்றைக்கால் மண்டபம்
ஊர்:
ஒத்தக்கால்மண்டபம்
மாவட்டம்:
கோயம்புத்தூர்
மாநிலம்:
தமிழ்நாடு
திருவிழா:
நிறை நிலா வழிபாட்டு மன்றத்தினரால் 1008 மலர் வழிபாடுல தினமும் மாலை 3 மணிக்கு யாக வேள்வி, பிரதோச விழா, அன்னாபிேஷகம், வருடத்தில் ஆறு காலம் ஆடவல்லானுக்கு(நடராஜர்) அபிேஷகமும், சிறப்பு பூஜையும், சித்திரை பெருவிழா, சித்திரை பௌர்ணமி.
தல சிறப்பு:
புற்றிடங்கொண்டீசர் கோவில் என்றால் பஞ்ச பூத தலங்களின் ஆகாயத் தலமான சிதம்பரத்தையும், அது மண் தலமான திருவாரூரையும் குறிக்கும். சோழர் காலத்தில் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்:
காலை:
5.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மாலை: 3 மணி முதல் இரவு 8.45 மணி வரை
முகவரி:
அருள்மிகு புற்றிடங்கொண்டீசர் கோவில் கோவை–பொள்ளாச்சி தேசிய நெடுங்சாலை, ஒத்தக்கால் மண்டபம், கோயம்புத்தூர் – 641032
போன்:
+91 98422 03577
பொது தகவல்:
கோவை–பொள்ளாச்சி மெயின் ரோட்டில் கிழக்கு திசையில் அமைந்துள்ளது. சுடு காட்டின் அருகில் அமைந்துள்ள தலம் இது. முன்பக்கம் குளம் அமைந்துள்ளது. கோவில் பிரகாரத்தை சுற்றி விநாயகர், முருகன், காலபைரவர் சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை
இங்கு வேண்டுதல் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் இறைவனுக்கு வைக்கும் கோரிக்கைகளை தினமும் நடக்கும் வேள்வி பூஜையில் வாசிக்கப்பட்டு, நிவர்த்தி காண படுகிறது.
நேர்த்திக்கடன்:
அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.
தலபெருமை:
கோவையில் உள்ள சிவ தலங்களில் முக்கியமான ஒன்று இது. பேரூர் பட்டீஸ்வரர், வெள்ளலுார் தேனிஸ்வரர் போன்ற தலங்களுக்கு ஒப்பானது.
தல வரலாறு:
கோவையில் உள்ள சிவ தலங்களில் முக்கியமான ஒன்று இது. பேரூர் பட்டீஸ்வரர், வெள்ளலுார் தேனிஸ்வரர் போன்ற தலங்களுக்கு ஒப்பானது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
புற்றிடங்கொண்டீசர் கோவில் என்றால் பஞ்ச பூத தலங்களின் ஆகாயத் தலமான சிதம்பரத்தையும், அது மண் தலமான திருவாரூரையும் குறிக்கும். சோழர் காலத்தில் கட்டப்பட்டது.