நிலக்கோட்டை சித்தர்மலை சித்தமகாலிங்க சுவாமி கோவில்

மூலவர்:


சித்தமகாலிங்க சுவாமி


உற்சவர்:

சிவன்


தீர்த்தம்:

கற்பூர தீா்த்தம்


புராண பெயர்:

சித்தர்மலை


ஊர்:

நிலக்கோட்டை


மாவட்டம்:

திண்டுக்கல்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

பிரதோஷம், மாத சிவராத்திரி, அமாவாசை, புரட்டாசி சனி, திருக்கார்த்திகை


தல சிறப்பு:

சித்தர்மலை சிவன் கோயில் சதுரகிரிக்கு இணையானதாக விளங்குகிறது. இந்த மலையில் ஆந்தையர், மகரிஷி போன்ற சித்தர்கள் வாழ்ந்ததால் சித்தர்மலை எனப்பட்டது.


திறக்கும் நேரம்:

காலை 9:

00 – 12:00 மணி, மாலை 4:00 – 6:00 மணி

முகவரி:

அருள்மிகு சித்தமகாலிங்க சுவாமி கோயில் (சித்தர்மலை), நிலக்கோட்டை, திண்டுக்கல்


போன்:

+91 98432 87130


பொது தகவல்:

*அருள்மிகு சித்தமகாலிங்கேசுவரா் மேற்கு நோக்கி அமா்ந்து அருள்பாலிப்பதும், அவாின் ஆவுடை வலதுபுறமாக அமைந்திருப்பதும் இத்திருக்கோவிலின் சிறப்பம்சமாகும்.


* இது போல் மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவனை வணங்கினால் ஆயிரம் சிவாலயங்களை தரிசித்த பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.


*இத்திருமலையின் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ள குகைகளும், கற்படுக்கைகளும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் சமணமுனிவா்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளாகத் திகழ்கின்றன.


*இக்கற்படுக்கையில் தலைப்பகுதியில் அமைந்துள்ள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்பிராமி கல்வெட்டுகள், இம்மலையின் பழமையைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளன.


*இத்திருமலையின் வடகிழக்கு மூலையில் கற்பூர தீா்த்தம் என்ற பெயாில் இயற்கையாக நீா்ச்சுனை ஒன்று அமைந்துள்ளது.


*இந்நீா்ச்சுனை சமண முனிவா்களால் ஏழு கடல்களின் சங்கமம் எனப் போற்றப்பட்டுள்ளது.


*இத்திருக்கோவில் மலையைச்சுற்றி அமைந்துள்ள அனைத்து கிராம மக்களுக்கும், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வசிக்கின்ற ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் வழிபடும் தெய்வமாக விளங்குகின்றது.


*இறைப்பணியில் பொருள் தந்து அருள் பெறக்காத்திருக்கும் பக்தா்களைப் பணிந்து வரவேற்கிறோம்.


*இத்திருப்பணி உங்கள் திருவருளால் நிகழ இருக்கிறது. இதற்க்குத் தேவை உங்கள் அன்பும் பொருளும் ஆகும்.


*இத்திருப்பணிக்கு ரூ.10,000/–(பத்தாயிரம்) அதற்கு மேல் கொடுத்து உதவும் ஆன்றோா்கள், அருளாளா்கள் மற்றும் சான்றோா்கள் பெயா்கள் திருக்கோயில் கல்வெட்டில் பொறிக்கப்படும்.


பிரார்த்தனை


இத்தலத்தில் வழிபட்டால் திருமணத்தடை, புத்திர தோஷம் நீங்கும். பிரதோஷம், மாத சிவராத்திரி நாளில் அன்னதானம் நடக்கிறது.


நேர்த்திக்கடன்:

மாத சிவராத்திரி நாளில் அன்னதானம் நடக்கிறது.


தலபெருமை:

மேற்கு நோக்கி இருக்கும் சிவலிங்கத்தின் ஆவுடைபாகம் (வட்டமான நடுப்பகுதி) வலப்புறமாக இருப்பது சிறப்பு. மலைப்பகுதியின் மேற்கில் உள்ள குகைகளில் சமண முனிவர்கள் வாழ்ந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழ் பிராமி கல்வெட்டுகள் உள்ளன.


தல வரலாறு:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை எஸ்.மேட்டுப்பட்டி அருகே உள்ள சித்தர்மலை சிவன் கோயில் சதுரகிரிக்கு இணையானதாக விளங்குகிறது.


இந்த மலையில் ஆந்தையர், மகரிஷி போன்ற சித்தர்கள் வாழ்ந்ததால் சித்தர்மலை எனப்பட்டது. இப்பகுதியை மல்லிகார்ஜூன நாயக்கர் ஆட்சி செய்தார். அவரது பசுக்களில் ஒன்று மலைக்கு செல்லும் போது மடி நிறைந்தும், கீழிறங்கும் போது மடி வற்றியும் காணப்பட்டது. சந்தேகமடைந்த நாயக்கர் ஒருநாள் பசுவை பின்தொடர்ந்தார்.


மலை உச்சியில் குறிப்பிட்ட இடத்தில் பசு, தானாக பால் சுரப்பதைக் கண்டு திடுக்கிட்டார். பசுவின் மீது மரக்குச்சியை எறிய அது அருகில் இருந்த சிவலிங்கத்தின் மீது பட நாயக்கரின் பார்வை பறி போனது. வருந்திய அவருக்கு காட்சியளித்த சிவபெருமான் கோயில் கட்ட உத்தரவிட்டார். 1487ல் சித்தமகாலிங்க சுவாமி கோயில் கட்டப்பட்டது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

சுவாமிக்கு ‘மல்லிகார்ஜூன லிங்கம்’ என்றும் பெயருண்டு. மேற்கு நோக்கி இருக்கும் சிவலிங்கத்தின் ஆவுடைபாகம் (வட்டமான நடுப்பகுதி) வலப்புறமாக இருப்பது சிறப்பு.

About the author

Leave a Reply

Your email address will not be published.