மூலவர்:
கல்யாண பசுபதீஸ்வரர்
உற்சவர்:
கல்யாண பசுபதீஸ்வரர்
அம்மன்/தாயார்:
பெரியநாயகி
தல விருட்சம்:
நாகலிங்கம் மரம்
தீர்த்தம்:
அகத்தியர் தீர்த்தம்
ஆகமம்/பூஜை :
சிவஆகமம்
புராண பெயர்:
அரசன் கழனி
ஊர்:
அரசன் கழனி
மாவட்டம்:
காஞ்சிபுரம்
மாநிலம்:
தமிழ்நாடு
திருவிழா:
பவுர்ணமி, மூன்றாவது ஞாயிறு, பிரதோஷம்
தல சிறப்பு:
மூலிகை சூழ்ந்த சிவலிங்கத்திற்கு அகத்தியர் பூஜை செய்து வழிபட்டதாக செவி வழி செய்தி உள்ளது. ஐந்து கோடியே ஐம்பது லட்சம் சிவநாமம் பதிக்கப்பட்ட’குபேரலிங்கம்’ இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் அருகாமையில் உள்ள குளத்தில் நீராடி விட்டு அர்ச்சனை செய்தால் திருமண தடை நீங்கும். பாவங்கள் நிவர்த்தி ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
பெரியநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், அரசன் கழனி. சென்னை -600130.
போன்:
+91 +91 8122299938, 9382664059
பொது தகவல்:
மூலிகை சூழ்ந்த இயற்கை எழில் கொண்ட, ஔடத மலை சூழ்ந்த இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
பிரார்த்தனை
கல்யாண தடை நீங்கி வரன் கூடவும், பாவங்கள் நிவர்த்தி அடையும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
ஒவ்வொரு மாதமும் நடக்கும் கிரிவலத்திலும், திருமுற்றோதல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டால் கல்யாண தடை நீங்கும். பாவங்கள் நிவர்த்தி ஆகும்.
தல வரலாறு:
காஞ்சிபுரம் மாவட்டம், சோழங்கநல்லூர் வட்டம், ஒட்டியம்பாக்கம் பஞ்சாயத்தில் அடங்கிய “அரசன் கழனி’ மிகவும் பழமையான கிராமம். இவ்வூரில் உள்ள குளத்தின் நடுவில் அமைந்த நிலப்பரப்பில் “சிவலிங்க திருமேனி ” மற்றும் “நந்தி தேவர்” சிதிலமடைந்து, கோயில் கட்டிடமின்றி, வழிபாடும் இன்றி பல ஆண்டு காலங்கள் இருந்தது. இக் குளக்கரையின் மேல் மிகவும் பாழடைந்த நிலையில் ஆதி கால தூண்கள் உள்ளன. மேலும் மிகப் பெரிய ஆதிகால மாவு ஆட்டும் கல் சி திலமடைந்த நிலையில் உள்ளது. இதன் அருகில் மூலிகை நிறைந்த இயற்கை எழில் சூழ்ந்த ஔதட மலை உள்ளது. இம் மலையில் அரசன் கழனி ஊர் மக்கள் பிரதி மாதம் கார்த்திகை திருநாளில் மாலை 6:
00 மணி அளவில், மலை உச்சியில் சிறிய அகல் விளக்கேற்றி பல ஆண்டுகளாக தீப வழிபாடு மேற்கொண்டு வந்துள்ளனர். கடந்த மூன்று வருடமாக இவ் வழிபாடு மேலும் சிறப்பாக மிகப் பெரிய கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பான வழிபாடு நடைபெறுகிறது.
மேலும் கடந்த 03-02-2012 அன்று லிங்கத் திருமேனியும், நந்தி பெருமானும் பிரஸ்திடை செய்யப்பட்டது. 08-04-2014 அன்று ஸ்ரீபெரியநாயகி அம்மன் பி ரஸ்திடை செய்யப்பட்டது. அன்றைய தினமே நாகேஸ்வரர் மற்றும் சண்டிகேஸ்வரர் பிரஸ்திடை செய்யப்பட்டது. மேலும் 04-06-2015 அன்று “சென்னையில் ஓர் கிரிவலம் ” என்ற பெயரில் பதினெட்டு பேர் கொண்ட சிவபக்தர் குழுவினரால் கிரிவல வழிபாடு தொடங்கப்பட்டது. இன்று சுமார் 2000 பேர் கொண்ட சிவபக்தர் குழு பிரதிமாதம் பவுர்ணமி அன்று கைலாய வாத்தியங்கள் முழங்க கிரிவல வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
ஐந்து கோடியே ஐம்பது லட்சம் சிவநாமம் பதிக்கப்பட்ட’குபேரலிங்கம்’ இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.