கம்மாளத்தெரு அருள்மிகு மிருத்திஞ்ஜயேஸ்வரர் திருக்கோயில் – Mrityunja Eswarar Temple

அருள்மிகு மிருத்திஞ்ஜயேஸ்வரர் திருக்கோயில்


மூலவர்:

மிருத்திஞ்ஜயேஸ்வரர்


தீர்த்தம்:

சுவேத குளம்


ஊர்:

கம்மாளத்தெரு


மாவட்டம்:

காஞ்சிபுரம்


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம்


தல சிறப்பு:

60,70,80 வயது நிரம்பியவர்கள் தங்களின் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் வைபவத்தை இங்கு நடத்துவது சிறப்பு.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு மிருத்திஞ்ஜயேஸ்வரர் திருக்கோயில் கம்மாளத்தெரு (புதுரயில் நிலையம் செல்லும்வழி) காஞ்சிபுரம்.


பொது தகவல்:

மணிவிழா:

60,70,80 வயது நிரம்பியவர்கள் தங்களின் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் வைபவத்தை இங்கு நடத்துகின்றனர். ஆயுள் ஆரோக்கியம் வேண்டி, ஹோமம் நடத்தி மிருத்திஞ்ஜயேஸ்வரரை வேண்டிக்கொள்கின்றனர். இதனால், ஆரோக்கியம், ஆயுள்விருத்தி உண்டாகும் என்பது ஐதீகம்.


பிரார்த்தனை


மணிவிழா காணும் தம்பதியர் இங்கு ஆயுள் ஹோமம் நடத்தி ஆரோக்கியம், ஆயுள்விருத்தி உண்டாக இங்குள்ள மிருத்திஞ்ஜயேஸ்வரரை வேண்டிக்கொள்கின்றனர்.


நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.


தலபெருமை:

ஒருசமயம் சுவேதன் என்னும் அந்தணர் அற்பாயுளில் உயிர் நீங்கும் என்பதை அறிந்து வருந்தினார். இறவாஸ்தானத்து ஈசனை வணங்கி குறை நீங்கப் பெற்றார். மார்க்கண்டேய முனிவர் எமனை வென்று என்றும் பதினாறு என்னும் இறவா நிலையைப் பெற்றார். சாலங்காய முனிவரின் பேரன், இங்குள்ள ஈசனை வணங்கி சிவகணங்களில் ஒருவராகும் பேறு பெற்றார். பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. நடமாடும் தெய்வமான காஞ்சிப்பெரியவர் பலமுறை தரிசனத்திற்காக வந்திருக்கிறார்.


தல வரலாறு:

தவசீலர்களான முனிவர்கள் பிரம்மாவிடம் இறப்பை வெல்ல வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தனர். பிரம்மா, இறப்பை வெல்ல நினைத்தால் பூலோகத்திலுள்ள காஞ்சிக்கு சென்று சிவனை நோக்கி தவம் செய்யுங்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும், என்று அருள்செய்தார். அவர்களும் காஞ்சிபுரத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து, தவத்தில் ஆழ்ந்து சிவனருளால் சாகாவரம் பெற்றனர். அந்தத் தலமே பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள இறவாஸ்தானக் கோயில் ஆகும். சிவன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இவருக்கு இறவாஸ்தானேஸ்வரர், மிருத்திஞ்ஜயேஸ்வரர் என்ற திருநாமங்கள் உள்ளன. தல தீர்த்தமாக சுவேத குளம் என்னும் வெள்ளைக்குளம் உள்ளது. மகாகவி காளிதாசரால் நகரேஷு காஞ்சி (நகரங்களில் சிறந்தது) என்று புகழப்பட்ட தலம் காஞ்சிபுரம்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

60,70,80 வயது நிரம்பியவர்கள் தங்களின் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் வைபவத்தை இங்கு நடத்துவது சிறப்பு.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *