மூலவர்:
மங்களேஸ்வரர்
அம்மன்/தாயார்:
மங்களாம்பிகா
தீர்த்தம்:
மங்கள தீர்த்தம்
ஊர்:
காஞ்சிபுரம்
மாவட்டம்:
காஞ்சிபுரம்
மாநிலம்:
தமிழ்நாடு
திருவிழா:
பிரதோஷம், சிவராத்திரி, பவுர்ணமி
தல சிறப்பு:
மங்களேஸ்வரரைத் தரிசனம் செய்யும் திருமணத்தடையுள்ளவர்களுக்கு தகுந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது நம்பிக்கை.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மங்களேஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம்.
போன்:
+91 44-2722 4149, 94430 66540.
பிரார்த்தனை
மங்களேஸ்வரரைத் தரிசனம் செய்யும் திருமணத்தடையுள்ளவர்களுக்கு தகுந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புதுவஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
சிநேகிதி சிவன்:
மணமகள் பார்வதிக்கு திருமணத்தின் போது பணிவிடை செய்ய தேவலோகத்தில் இருந்து வந்தவள் மங்களாம்பிகா. தேவிக்கு தோழியாக இருந்து பல உதவிகளையும் செய்து வந்தாள். திருமணம் முடிந்தபின், மங்களாம்பிகா சிவபூஜை செய்ய விரும்பினாள். அதற்காக சிவலிங்கம் ஒன்றையும், தீர்த்தம் ஒன்றையும் உருவாக்கினாள். சிவனுக்கு அபிஷேகம் செய்து தினமும் வழிபட்டாள். சிவன் அவளின் பூஜையை ஏற்று மோட்சக்தியை அருளினார். மங்களாம்பிகா வழிபட்டதால் சுவாமிக்கு மங்களேஸ்வரர் என்ற திருநாமம் உண்டானது. இந்தக் கோயிலிலுள்ள தீர்த்தத்துக்கும் மங்களதீர்த்தம் என பெயர் வந்தது.
தவம் செய்த வேம்பு:
மங்களேஸ்வரர் சந்நிதிக்குப் பின்புறம் வேப்பமரம் ஒன்றுள்ளது. செவ்வாய்க்கிழமை தோறும் இம்மரத்தடியில் காஞ்சிப்பெரியவர் தவம் செய்வது வழக்கம். இங்கு வரும்போது அவர் மங்களதீர்த்தத்தில் நீராடி மகிழ்வதுண்டு. மங்களேஸ்வரரைத் தரிசனம் செய்யும் திருமணத்தடையுள்ளவர்களுக்கு தகுந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு:
ஒருமுறை சிவலோகத்தில் பார்வதிதேவி விளையாட்டாக சிவனின் கண்களைப் பொத்தினாள். அண்டசராசரம் அனைத்தும் இருளில் மூழ்கியது. கோபம் கொண்ட சிவன், பார்வதி நீ பூலோகத்தில் பிறப்பாயாக, என சாபமிட்டார். பார்வதிதேவி தன் தவறுக்கு வருந்தி இறைவனாகிய தங்களை அடைவது எப்படி என்று கேட்டாள். நீ தவம் மேற்கொண்டு மீண்டும் கயிலையை வந்தடைவாய்! என்று சிவன் அருள்புரிந்தார். பார்வதியும், பூலோகத்தில் காஞ்சிபுரம் கம்பாநதிக்கரைக்கு வந்தாள். மணலால் லிங்கம் அமைத்து பூஜை செய்தாள். ஒருநாள் ஆற்றில் வெள்ளம் வரவே சிவலிங்கத்தைக் காப்பாற்ற எண்ணி, தன் இருகைகளாலும் அணைத்தாள். வெள்ளத்தில் இருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டுமென்ற அன்புள்ளம் கொண்ட தேவியின் முன் சிவன் நேரில் தோன்றி அருள்பாலித்தார். அந்த இடத்திலேயே தங்கும்படி தேவி கேட்டுக்கொள்ள ஏகாம்பரநாதர் என்னும் பெயரில் தங்கினார். பார்வதியை திருமணம் செய்து கொண்டார்.