சோழவந்தான் அருள்மிகு வாலகுருநாதர் திருக்கோயில் – Valagurunathar Temple

அருள்மிகு வாலகுருநாதர் திருக்கோயில்


மூலவர்:

வாலகுருநாதர்


உற்சவர்:

அங்காள ஈஸ்வரி


அம்மன்/தாயார்:

அங்காள ஈஸ்வரி


தல விருட்சம்:

வில்வ, நாகலிங்க மரம்


ஆகமம்/பூஜை :

சைவம்


புராண பெயர்:

ஜனகை நகர்


ஊர்:

சோழவந்தான்


மாவட்டம்:

மதுரை


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

மாசி சிவராத்திரி, தமிழ் புத்தாண்டு, ஆடி 18, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, ஆடி வெள்ளிக்கிழமைகள் மற்றும் வரலட்சுமி நோன்பு அன்றும் விளக்கு பூஜை, அமாவாசை, பவுர்ணமி, திருக்கார்த்திகை, தைப்பொங்கல்


தல சிறப்பு:

வாலகுருநாத சுவாமியும், அங்காள ஈஸ்வரியும் ஒரே மூலஸ்தானத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.


திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

பெரியாண்டவர் அருள்மிகு வாலகுருநாத சுவாமி அங்காளஈஸ்வரி கோயில், மேலரத வீதி, சோழவந்தான், 625214 வாடிபட்டி வட்டம். மதுரை மாவட்டம்


போன்:

+91 452-43258578, 99944 27018


பொது தகவல்:

பெரியாண்டவர் அருள்மிகு வாலகுருநாத சுவாமி அங்காளஈஸ்வரி, விநாயகர், வீரபத்திரர், நந்தீஸ்வரர், மாயாண்டி (இருளப்பன்) வீரபத்திரர், பேச்சியம்மன், முத்து பேச்சியம்மன், பெரிய கருப்பணசுவாமி, சப்பாணி, சந்தனக்கருப்பு, சோனை சுவாமி, மதுரை வீரன், சங்கிலிகருப்பு, ராக்காயி அம்மன், நாகம்மாள், வீராயிஅம்மன், லாடசன்னாசி, கொங்கையா, பாதாளஅம்மன், ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.


பிரார்த்தனை


தினசரி காலை, மாலை பூஜை, திருவிளக்கு வழிபாடு திருமண தடை நீங்க சிறப்பு வழிபாடு, கேட்டவர்க்கு கேட்ட வரம் தரும் அம்மன்.


நேர்த்திக்கடன்:

மாசி சிவன்ராத்திரியை முன்னிட்டு கிடாவெட்டுதல், முடிகாணிக்கை செலுத்துதல், அன்னதானம்.


தலபெருமை:

அனைத்து இனத்தை சேர்ந்த மக்கள் 500 ஆண்டுகளுக்கு மேல் வழிபடுகின்றனர்.


தல வரலாறு:

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதில் பெட்டி ஒன்று மிதந்து வந்தது. பெட்டியை பார்த்த ஒரு சமூகத்தினர் பெட்டி தங்களுக்கு சொந்தம் என்றும், மற்றொரு சமூகத்தினர் பெட்டிக்குள் உள்ள பொருட்கள் தங்களுக்கு சொந்தம் என்றனர். அங்கு மீன் பிடித்த சிலர் பெட்டியை தூக்கி வந்து ஒரு இடத்தில் வைத்தனர் (தற்போது கோயில் உள்ள இடம்). பெட்டியை திறந்து பார்த்தபோது, அதில் (21) சுவாமி, அம்மன் சிலைகள் (செம்பு) இருந்தன கூறப்படுகிறது. அது முதல் இப்பகுதியில் வழிபாடு துவங்கியது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

வாலகுருநாத சுவாமியும், அங்காள ஈஸ்வரியும் ஒரே மூலஸ்தானத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.

About the author

Leave a Reply

Your email address will not be published.